சிறுமிகள் முதல் அரசாங்கம் வரை அடாவடி...! ஆபாச அர்ச்சனை செய்யும் மதன் யுடியூபர் ....!
Send us your feedback to audioarticles@vaarta.com
பெண்கள், குழந்தைகள், ஆண்கள் மற்றும் சிறுவர்கள் என பப்ஜி மதனுக்கு, ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். இந்தியாவில் ஆன்லைன் கேம்-ஆன பப்ஜி தடை செய்யப்பட்டிருந்தாலும், பலரும் VPN முறையில் சட்டவிரோதமாக விளையாடி வருகிறார்கள். இந்த விளையாட்டில் நுணுக்கங்களையும், அடுத்த லெவலுக்கு எப்படி செல்வது என்பது குறித்தும் யுடியூபில் லைவ் வீடியோக்களை வெளியிட்டு வரும் மதன், சக போட்டியாளர்களிடம் ஆபாசமாக பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளான்.
அதுவும் வயசு வித்தியாசம் பார்க்காமல் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடம் அசிங்கமாக கெட்ட வார்த்தைகள் பேசுவது, இளம்பெண்களிடம் ஆபாச சேட் செய்வது போன்றவற்றையே பொழுதுபோக்காக கொண்டுள்ளான். குறிப்பாக பெண்களின் உறுப்புகளை பற்றி பேசுவது, இரவு நேர சேட்-க்கு அழைப்பது போன்ற சில்மிஷ வேலைகளையும் பார்த்து வந்துள்ளான்.
என்னை பற்றி புகாரளித்தால் உங்கள் குடும்பத்தினரை கொன்று விடுவேன், திடீரென நீயும் செத்துபோய்விடுவாய் என்று அதிகார தோனியில் மிரட்டுவது அதிகாரத்தின் உச்சம் என்றே சொல்லலாம்.டேக்ஸ் கட்டணும், காசும் வாங்கிபானுங்க என மத்திய அரசையும், சரக்க சப்ளை பண்றதே இவனுங்க தான் என மாநில அரசையும், பானி பூரி கடைக்காரர்களிடம் காசு வாங்கிக்கிறனுங்க என்று காவல் துறையினரையும் வசை பாடியுள்ளான் மதன்.
முகத்தை காட்டாமல் சிறுவர்களிடம் மூளைச்சலவை செய்து பேசியும், பெண்களிடம் ஆன்லைன் விளையாட்டில் தகாத வார்த்தைகளிலும் மிகச்சாதரணமாக பேசியுள்ளான். பப்ஜி தடைசெய்யப்பட்ட போது, மத்திய அரசை "ப்ரோ" என அழைத்து மதன் வெளியிட்ட ஆடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசாங்கம் முதல் சிறுவர்கள் பலரையும், ஆபாசமாக பேசிய மதன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் மதனை ஆஜராக சொல்லும் பட்சத்தில், இந்த கொடூரன் தலைமறைவாகியுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com