"என்பேரு மாணிக்கம்,எனக்கு இன்னொரு பேரு இருக்கு".... மோசடி மதன்...! யுடியூபரின் தில்லாலங்கடி வேலைகள்....!
- IndiaGlitz, [Thursday,June 17 2021]
ஆபாச மதன் கடந்த சில மாதங்களுக்கு, ஆடம்பர ஹோட்டல் ஒன்றை நடத்தி அதில் பல மோசடிகள் செய்துள்ளதாக, விசாரணையில் அவன் மனைவி தெரிவித்துள்ளார்.
விளையாட்டை ஆபாசமாக பேசி, யுடியூபில் பதிவிட்ட மதனின் மனைவியை சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், கிருத்திகாவிற்கு தெரிந்தே தான் இந்த கீழ்த்தரமான செயல்கள் நடந்ததாகவும், மனைவி தான் சேனல் அட்மின் என்றும் தெரிய வந்துள்ளது. இதேபோல் அசிங்கமாக பேசி வீடியோ வெளியிட்டே, மதன் மாதம் 10 லட்சம் வரை சம்பாதித்துள்ளான். இந்த பணத்தை வைத்து 2 ஆடம்பர கார்கள் மற்றும் சென்னையில் 2 சொகுசு வீடுகளை வாங்கியுள்ளான்.
இதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன் அம்பத்தூர், கள்ளிக்குப்பம் பகுதியில் ஹீரோ என்ற அசைவ ஆடம்பர ஹோட்டல் ஒன்றை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளான். இதற்காக ஹோட்டலை ஆதாரமாக காட்டி, 5 லட்சம் வங்கியில் கடன்வாங்கி, மோசடி செய்துள்ளான். அதேபோல் ஹோட்டல் உரிமையாளருக்கும் பல மாதங்களாக வாடகை தராமல் தப்பி ஓடிய விஷயம், கிருதிக்காவை விசாரித்ததில் தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து உரிமையாளர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் மதன் மீது புகார் கொடுத்தார்.
அந்தசமயம் தன் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால், கிருத்திகாவை அழைத்துக்கொண்டு மதன் ஓடிவிட்டான். இதன்பின் மோசடி தம்பதி யுடியூப் சேனல்கள் துவங்கி, ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு, அதன் மூலம் பல லட்சங்கள் சம்பாதித்தது தெரியவந்துள்ளது. இதற்காக 3 சிம்கார்டுகளை பயன்படுத்திய இவர்கள், பப்ஜி விளையாட்டை VPN முறையில் விளையாடி பதிவிட்டு வந்துள்ளனர். அவ்வப்போது மதன் சேனலில் வரும் பெண்ணின் குரல் கிருத்திகாவுடையது தான்.
இதற்காக தம்பதி பயன்படுத்திய லேப்டாப்கள், கம்பியூட்டர்கள் மற்றும் செல்போன்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிறுவர், சிறுமிகளிடமும் மதன் பணத்தை ஏமாற்றி வாங்கியுள்ளானா என்பது குறித்தும், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். 30%-க்கும் அதிகமாக சிறுவர்கள் மதன் சேனலை பார்ப்பதால், போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஆதாரங்களை திரட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.