யூடியூபர் மதன் சார்பில், முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல்...!

  • IndiaGlitz, [Wednesday,June 16 2021]

ஆன்லைன் மூலமாக மட்டும் யூடியூபர் மதன் மீது 150-க்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளதாக, மத்திய குற்றபிரிவு சைபர் கிரைம் மூலமாக வந்த செய்திகள் கூறுகின்றது.

கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் மதன் என்ற தன்னுடைய பெயரிலே யூடியுப் சேனலை நடத்தி வருகிறார். இதுவரை சுமார் 659 வீடியோக்களையும், 778K சப்ஸ்கிரைபர்களையும் வைத்துள்ளார். இதேபோல் TOXIC MADAN 18+ என்ற மற்றுமொரு யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். இந்த சேனலானது 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்காக மட்டுமே. இதனால் வெறும் 11 வீடியோக்களில் 100K சப்ஸ்கிரைபர்களை விரைவில் அள்ளியுள்ளார். இந்த பப்ஜி கேமிங் சேனல்கள் மூலமாக நிறையா காசு சம்பாரித்தும் வருகிறார்.இந்நிலையில் இவருடைய சேனலை, பப்ஜி விளையாடக்கூடிய 18 வயதிற்கும் குறைவான சிறுவர்கள், சிறுமிகள், இளம்பெண்கள் பார்த்துவருகிறார்கள். பப்ஜி போன்ற லைவ் வீடியோ கேம்களில் எப்படி எளிதில் எளிதாக வெல்வது என்பது குறித்து, ஆபாசமாக பேசுவது மூலம் இவன் பிரபலமானான். குறிப்பாக மதனுடன் விளையாடும் சகபோட்டியாளர்கள் மற்றும் பெண்களிடம் ஆபாசமாக பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளான். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தால், என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது, என்னை காப்பாற்ற என் வக்கீல் உள்ளார். எந்த விதமான பணப்பிரச்சனை வந்தாலும் என்னால் பார்த்துக்கொள்ள முடியும் என்று பலருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதே அதிகாரத்தின் உச்சம். ஆதரவற்ற மக்களுக்கு உதவுவதாகவும், இளைஞர்களிடம் இருந்து நன்கொடை பெற்று ஏமாற்றி வருகிறார்.

மதனின் இந்த ஆபாச பேச்சு காரணமாக, அவர் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராகும்படி புளியந்தோப்பு காவல்துறையினர் உத்தரவிட்டதன் பேரில், மதன் தற்போது தலைமறைவாகி உள்ளான். மாநில குழந்தைகள் உரிமைகள் ஆனையமும், சைபர் கிரைம் துறையினர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவிலும் மதன் புகாரளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மதனின் இன்ஸ்டா பக்கத்தை விரைவில் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவனின் யுடியூப் சேனலை முடக்க யூடியூப் நிறுவனத்திற்கு காவல் துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில்அண்மையில் சேலம் மாவட்டத்தில், மதனின் மனைவி கீர்த்திகா மற்றும் அவரது குடும்பத்தினரிடத்தில், காவல் துறையினர் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரது தோழி ஒருவரிடமும் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், சமூக ஆர்வலர்கள் பலரும் மதன் மீது புகாரளித்துள்ள நிலையில், காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் மதனுக்கு முன் ஜாமீன் அளிக்கவேண்டும் என்று,அவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

More News

ஓடிடியில் 'மாநாடு' ரிலீஸா? தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தகவல்!

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன்ஷங்கர்ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'மாநாடு'. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு கிடைக்க போக்கும் ஆச்சரியம்?

இந்த ஆண்டு விஜய் தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் நிலையில் அவருடைய ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தடுப்பூசி போட்டதும் டிரேட்மார்க் சிரிப்பை வெளிப்படுத்திய 'குக் வித் கோமாளி' ரித்திகா!

கொரோனா வைரஸ் பாதிப்பு நெருங்காமல் இருக்க வேண்டுமென்றால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக திரையுலக பிரபலங்கள் பலர்

இவங்க தான் பொன்னாட: 'பகவான்' பட அப்டேட்டை கொடுத்த ஆரியின் வீடியோ வைரல்

பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி, தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் 'எல்லாம் மேல இருக்குறவன் பாத்துக்குவான்', 'அலேகா' மற்றும் 'பகவான்' ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார்

தலைமறைவாகவுள்ள யூடியூப் மதன் மனைவி கைது: போலீஸார் தீவிர விசாரணை!

மதன் என்பவர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி, அதில் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை சிறுவர், சிறுமிகளிடம் விளையாடியதாகவும் அப்போது அவர் சிறுவர் மற்றும் சிறுமிகளிடம் ஆபாசமாக