யுடியூபர் மதன் தலைமறைவு - குடும்பத்தினரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை....!
Send us your feedback to audioarticles@vaarta.com
மதனின் குடும்பத்தினரிடம் காவல் துறையினர் இன்று விசாரணை நடத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பெண்கள், குழந்தைகள், ஆண்கள் மற்றும் சிறுவர்கள் என பப்ஜி மதனுக்கு, ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். இந்தியாவில் ஆன்லைன் கேம்-ஆன பப்ஜி தடை செய்யப்பட்டிருந்தாலும், பலரும் VPN முறையில் சட்டவிரோதமாக விளையாடி வருகிறார்கள். இந்த விளையாட்டில் நுணுக்கங்களையும், அடுத்த லெவலுக்கு எப்படி செல்வது என்பது குறித்தும் யுடியூபில் லைவ் வீடியோக்களை வெளியிட்டு வரும் மதன், சக போட்டியாளர்களிடம் ஆபாசமாக பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளான்.
யுடியூப் சேனல்:
கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் "மதன்" என்ற தன்னுடைய பெயரிலே யூடியுப் சேனலை நடத்தி வருகிறார். இதுவரை சுமார் 659 வீடியோக்களையும், 778K சப்ஸ்கிரைபர்களையும் வைத்துள்ளார். இதேபோல் "TOXIC MADAN 18+" என்ற மற்றுமொரு யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். இந்த சேனலானது 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்காக மட்டுமே. இதனால் வெறும் 11 வீடியோக்களில் 100K சப்ஸ்கிரைபர்களை விரைவில் அள்ளியுள்ளார். இந்த பப்ஜி கேமிங் சேனல்கள் மூலமாக நிறையா காசு சம்பாரித்தும் வருகிறார்.இந்நிலையில் இவருடைய சேனலை, பப்ஜி விளையாடக்கூடிய 18 வயதிற்கும் குறைவான சிறுவர்கள், சிறுமிகள், இளம்பெண்கள் பார்த்துவருகிறார்கள். பப்ஜி போன்ற லைவ் வீடியோ கேம்களில் எப்படி எளிதில் எளிதாக வெல்வது என்பது குறித்து, ஆபாசமாக பேசுவது மூலம் இவன் பிரபலமானான். குறிப்பாக மதனுடன் விளையாடும் சகபோட்டியாளர்கள் மற்றும் பெண்களிடம் ஆபாசமாக பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளான். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தால், என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது, என்னை காப்பாற்ற என் வக்கீல் உள்ளார். எந்த விதமான பணப்பிரச்சனை வந்தாலும் என்னால் பார்த்துக்கொள்ள முடியும் என்று பலருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதே அதிகாரத்தின் உச்சம். ஆதரவற்ற மக்களுக்கு உதவுவதாகவும், இளைஞர்களிடம் இருந்து நன்கொடை பெற்று ஏமாற்றி வருகிறார். மதனின் இந்த ஆபாச பேச்சு காரணமாக, அவர் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராகும்படி புளியந்தோப்பு காவல்துறையினர் உத்தரவிட்டதன் பேரில், மதன் தற்போது தலைமறைவாகி உள்ளான்.
பெண்களிடம் ஆபாச பேச்சு:
தன்னுடைய யூடியூப்-இல், இன்ஸ்டாகிராம் பக்கத்தை இணைத்துள்ள மதன், சிறுமிகளை அந்த சமூக வலைத்தளத்திற்கு வருமாறு அழைத்து அந்தரங்க பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளான். மேலும் குறிப்பாக ஆன்லைன் விளையாட்டிற்கு வரும் சில பெண்களை குறிவைத்து, இரவில் ஆடையில்லாமல் வீடியோ சார்ட் செய்யலாம், நீ ஆணாக மாறினால் என்ன செய்வாய், பெண்ணாக மாறினால் என்ன செய்வாய் என்று பெண்களிடம் வினவுவது ஆபாசத்தின் உச்சம். இதையடுத்து பெண்களின் அந்தரங்க உறுப்புகள் பற்றி ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலாரிடமும் கேவலமாக பேசியுள்ளேன் இந்த கொடூரன்.
இதற்கு அடுத்த கட்டமாக அந்தரங்க மருத்துவராக மாறிய மதன், முதலிரவிற்கு செல்லும் ஆண்கள் கை,கால்,இடுப்பு பகுதி மற்றும் உடலை எப்படி வலுவாக வைத்துக்கொள்ளலாம் என்றும் ஆபாச டிப்ஸ் கொடுத்துள்ளான். பெண்களிடம் என்னிடம் மூன்றாவது மனைவியாகவே இருந்து கொள், என அந்தரங்க பேச்சுக்களை அடுக்கிக்கொண்டே போயுள்ளான். ஆனால் இதெல்லாம் தெரியாத சில குழந்தைகளும், இது போன்று சேனல்களை துவங்கி விளையாட்டில் கெட்ட வார்த்தைகளை பேசி வருகின்றனர். மதனின் பேன்ஸ் என சொல்லித்திரியும் சிலரும் அவருக்கு வரிந்துகட்டிக்கொண்டு நல்லவர் என்று கொடி தூக்கி வருகிறார்கள்.
மாநில குழந்தைகள் உரிமைகள் ஆனையமும், சைபர் கிரைம் துறையினர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவிலும் மதன் புகாரளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மதனின் இன்ஸ்டா பக்கத்தை விரைவில் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவனின் யுடியூப் சேனலை முடக்க யூடியூப் நிறுவனத்திற்கு காவல் துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு மற்றும் காவல் துறைக்கு மிரட்டல்:
"என்னை பற்றி புகாரளித்தால் உங்கள் குடும்பத்தினரை கொன்று விடுவேன், திடீரென நீயும் செத்துபோய்விடுவாய்" என்று அதிகார தோனியில் மிரட்டுவது மதனின் அதிகாரத்தின் உச்சம், காசு உள்ள திமிர் என்றே சொல்லலாம்.டேக்ஸ் கட்டணும், காசும் வாங்கிபானுங்க என மத்திய அரசையும், சரக்க சப்ளை பண்றதே இவனுங்க தான் என மாநில அரசையும், பானி பூரி கடைக்காரர்களிடம் காசு வாங்கிக்கிறனுங்க என்று காவல் துறையினரையும் வசை பாடியுள்ளான் மதன்.பப்ஜி தடைசெய்யப்பட்ட போது, மத்திய அரசை "ப்ரோ" என அழைத்து மதன் வெளியிட்ட ஆடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசாங்கம் முதல் சிறுவர்கள் பலரையும், ஆபாசமாக பேசிய மதன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் மதனை ஆஜராக சொல்லும் பட்சத்தில், இந்த கொடூரன் தலைமறைவாகியுள்ளான்.
இந்தநிலையில் இன்று சேலம் மாவட்டத்தில், மதனின் மனைவி கீர்த்திகா மற்றும் அவரது குடும்பத்தினரிடத்தில், காவல் துறையினர் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments