மன்னிப்பு கேட்ட பின்னரும் இர்பான் மீது நடவடிக்கையா? மருத்துவத்துறை அதிகாரிகள் விளக்கம்..!

  • IndiaGlitz, [Wednesday,May 22 2024]

பிரபல யூட்யூபர் இர்பான் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் குறித்த வீடியோவை வெளியிட்ட நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசின் மருத்துவத்துறை பரிந்துரை செய்தது. இந்த நிலையில் இர்பான் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டதோடு சர்ச்சைக்குரிய வீடியோவையும் டெலிட் செய்து விட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என மருத்துவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

பிரபல யூடியுபர் இர்பான் தனது சமூக வலைத்தளத்தில் கர்ப்பமாக இருக்கும் மனைவியின் வயிற்றில் உள்ளது பெண் குழந்தை என ஸ்கேன் எடுத்து அறிந்து கொண்டதாக சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இந்தியாவில் பிறக்கப் போகும் குழந்தை பாலினம் குறித்து ஸ்கேன் எடுப்பது குற்றமாக கருதப்படும் நிலையில் அவர் துபாய் சென்று ஸ்கேன் எடுத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட இர்பான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவத்துறை முடிவு செய்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரை செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இர்பான் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டதோடு மருத்துவத் துறை அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்டதாகவும் மேலும் சர்ச்சைக்குரிய வீடியோவை அவர் டெலிட் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை அறிவித்த இர்பான் விளக்கம் மற்றும் மன்னிப்பு கடிதத்தை மருத்துவத்துறை அதிகாரிகளை ஏற்றுக் கொண்டதாகவும் அவர் மீது நடவடிக்கை இல்லை என கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.