அப்பா ஆனார் யூடியூபர் இர்பான்.. முன்கூட்டியே கொண்டாட்டம் நடத்திய அதே குழந்தை தான்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல யூடியூபர் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான இர்பானுக்கு குழந்தை பிறந்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
கடந்த ஆண்டு ஆசிபா என்பவரை யூடியூபர் இர்பான் திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் அவரது மனைவி கர்ப்பமானார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தை பாலினம் குறித்து துபாயில் டெஸ்ட் எடுத்து அதை அறிவித்து விழா நடத்தினார்.
கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிவது இந்தியாவில் சட்டப்படி குற்றம் என்பதை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் எழுந்தன. ஆனால் இது குறித்த வீடியோவை இர்பான் நீக்கியதை அடுத்து பிரச்சனை முடிவடைந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சற்றுமுன் இர்பான் தனது சமூக வலைதளத்தில் தனக்கு பெண் குழந்தை பிறந்ததாக அறிவித்துள்ளார். ஏற்கனவே பெண் குழந்தை பிறக்கப் போகிறது என்பதற்காக தான் முன்கூட்டியே அவர் பாட்டி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது குழந்தையின் விரலை பிடித்தவாறு எடுத்த புகைப்படத்தை இர்பான் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து, ‘திடீரென்று எல்லாம் மாறிவிட்டது! என் இளவரசி இப்போது இங்கே இருக்கிறாள், என் பெண் குழந்தை! என்ன நல்லது பண்ணியிருக்கேன்னு தெரியல, எனக்கு இப்பிடி ஒரு சந்தோசம் கெடச்சுருக்கு.. என் குடும்பம் வளர்ச்சி அடைந்துள்ளது’ என்று எமோஷனலாக பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments