குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய யூடியூபர் இர்ஃபான்: நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல யூடியூபர் இர்பான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டிய வீடியோவை வெளியிட்டிருந்த நிலையில், இந்த வீடியோ பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குனர் ராஜமூர்த்தி அவர்கள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனக்கு குழந்தை பிறந்தது பற்றிய வீடியோவை அவர் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் அறுவை சிகிச்சை ஆரம்பித்து குழந்தை பிறப்பதை வீடியோ பதிவு செய்துள்ளார், இதோடு குழந்தையின் தொப்புள் கொடியை தானே வெட்டிய காட்சியும் உள்ளது.
இது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகிய நிலையில், இது குறித்து மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குனர் ராஜமூர்த்தி கூறியபோது, "குழந்தையின் தொப்புள் கொடியை ஒரு மருத்துவர் அல்லது அறுவை சிகிச்சை நிபுணர் அல்லது பயிற்சி பெற்ற நர்ஸ் மட்டுமே வெட்ட வேண்டும். இவர் வெட்டியது தவறு, எனவே அவர் மீது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அந்த நோட்டீஸ்க்கு பிறகு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்," என்று தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com