மீனாவை திருமணம் செய்து கொள்ள தயார்.. யூடியூபரின் சர்ச்சை பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல யூடியூபர் ஒருவர் மீனாவை திருமணம் செய்து கொள்ள தயார் என்று பதிவு செய்திருப்பதற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீனா என்பதும் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, அஜித் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.
இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் காலமான நிலையில் அந்த அதிர்ச்சியில் இருந்து அவர் வெளிவர பல மாதங்கள் ஆனது என்பதும் தற்போது தான் கலா மாஸ்டர் உட்பட ஒரு சிலர் அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மீனாவின் இரண்டாவது திருமணம் குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவி வரும் நிலையில் கேரளாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் மீனாவை தான் திருமணம் செய்து கொள்ள தயார் என்றும் அவருக்கு குழந்தை இருப்பது தனக்கு தெரியும் என்றும் இருப்பினும் அவரை திருமணம் செய்ய தான் தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இவர் நடிகைகள் நித்யா மேனன், கமல்ஹாசன் மகள் அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட சில நடிகைகளை திருமணம் செய்து கொள்ள தயார் என்று சர்ச்சைக்குரிய வகையில் இதே நபர் அறிவித்திருந்தார். அந்த வரிசையில் தற்போது மீனாவையும் திருமணம் செய்து கொள்ள தயார் என்று கூறியுள்ளார்.
நடிகை மீனா தனக்கு இரண்டாவது திருமணத்தில் விருப்பமில்லை என்று தெளிவாக கூறியுள்ள நிலையிலும் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்த அந்த யூடியூபருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments