"யுடியூப் டான் மதன்", டம்மி பீஸ் ஆனது எப்படி...!கோபித்தவனுக்கு குட்டு வைத்த போலீஸ்....!
- IndiaGlitz, [Saturday,June 19 2021]
யுடியூபர் மதன் தருமபுரியில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, காவல் துறையினர் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மதன் யுடியூப் மூலம் ஆபாச பேச்சுக்கள் பேசி குறுகிய காலத்தில் சம்பாரித்த சொத்துக்கள் அனைத்திற்கும், காவல் துறையினர் ஆப்பு வைத்துள்ளனர்.
மக்களின் காசில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த மதனின் சொத்து மதிப்புக்கள் நிலவரம்:
1. யுடியூபில் ஆபாச வீடியோக்கள் மூலம் மாதம் ரூ.10 லட்சம் வரை வருமானம்.
2. வீடியோக்களில் மற்றவர்களுக்கு உதவுவதாக கூறி கூகுள் பே, போன் பே மற்றும் பேடிஎம் மூலம் சிறுவர்கள், இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்துள்ளான்
3. தன்னுடைய ரசிகர்கள் குறித்து லைவ்-ல் பேசவேண்டுமென்றால், அதற்காக தனியாக பணத்தை வசூல் செய்துள்ளான்.
4. ரசிகர்கள் பெயர் சொல்லவேண்டுமெனில் அதற்கு தனி காசு.
5. தன்னை குறித்து பிற ரசிகர்கள், வீடியோ பதிவிட்டால் அவர்களுக்கு மதன் ரூ.5000 தந்துள்ளான்.
5. தன்னிடம் லைவ்-ல் பேசுவதற்காக, முன் கூட்டியே ஒரு பெண்ணை பேச வைத்து, அவருக்கு 5 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளான்.
5.அம்பத்தூரில் ஆடம்பர ஹோட்டல் நடத்தி வங்கியிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி ஏமாற்றியுள்ளான்.
6. இதே போல் கடை உரிமையாளருக்கு பல மாதங்கள் வாடகை 2 லட்சத்தை தராமல் தப்பி ஓடியுள்ளான்.
7. கோடிக்கணக்கில் சம்பாதித்த பணத்திற்கு இவ்வளவு நாள் வரி செலுத்தவில்லை. அந்த பணம் மூலம் மனைவிக்கு தங்கம் மற்றும் வைர நகைகள் வாங்கியுள்ளான்.
8. கிரிப்டோகரன்சியான பிட்காயின் மற்றும் பங்கு வர்த்தகத்திலும், முதலீடு செய்துள்ளான் மதன்.
9. மூதாட்டிக்கு பணம் ஐயாயிரம் பணம் தருவது போல நடிக்க வைத்து, வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளான்.
10. சென்னையில் 45 லட்சம் மதிப்பில் 2 உயர்ரக பங்களாக்களை வாங்கியுள்ளான்.
11. பப்ஜி மட்டுமில்லாமல், தடை செய்த சில கொரிய விளையாட்டுக்களை, சட்டவிரோதமான முறையில் பதிவிறக்கம் செய்து விளையாடி வந்துள்ளான்.
மதனின் உல்லாச வாழ்வுக்கு ஆப்பு வைத்த போலீஸ்:
1.மதன் மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்கில் உள்ள 4 கோடி ரூபாய் இருந்துள்ளதால், இதையும் காவல் துறையினர் முடக்கம் செய்துள்ளனர்.
2.மதனின் 2 ஆடி கார்கள், ஐ-பாட், உயர்ரக லேப்டாப்கள், கணினிகள் மற்றும் செல்போன்களை சைபர் கிரைம் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
3. டாக்சிக் மதனின் 2 யுடியூப் சேனல்களையும் விரைவில் முடக்க யுடியூப்பிற்கு காவல் துறையினர் கடிதம் எழுதியுள்ளனர். சேனல்கள் விரைவில் முடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முகத்தை காண்பிக்காமல் போலீசுக்கு சவால் விடுத்த மதனை, காவல் துறையினர் கைது செய்கையில் என்னை மன்னித்து விடுங்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களை சீரழிக்கும் வகையில் தெரியாமல் பேசி விட்டேன் என்று காலில் விழுந்து கதறி அழுதுள்ளான். அவனை கைது செய்த சைபர் கிரைம் காவல் அதிகாரிகள், யாரேனும் பணத்தை கொடுத்து ஏமார்ந்திருந்தால் தைரியமாக புகார் அளிக்கலாம் என்று அறிவித்துள்ளனர்.
யுடியூப்பில் டானாகவும், தன்னை அழகானவர் போல காண்பித்த மதனின், தொப்பையும், தடித்த உருவத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர்.