10 லட்சம் வீடியோக்களை டெலிட் செய்த யுடியூப் நிறுவனம்....! காரணம் என்ன....?
- IndiaGlitz, [Thursday,August 26 2021]
கொரோனா குறித்த தவறான பதிவுகளை வெளியிட்டிருந்த, 10 லட்சம் யுடியூப் வீடியோக்களை டெலிட் செய்துள்ளது யுடியூப் நிறுவனம்.
கடந்த வருடம் இந்தியாவில் கொரோனா வைரஸ் துவங்கிய காலத்திலிருந்து, யுடியூப்பில் கோவிட் குறித்த தவறான செய்திகளும், அபாயகரமான தகவல்களும் வீடியோக்களாக பரவ துவங்கின. யுடியூப் தளத்தில் பல லட்சக்கணக்கான வீடியோக்கள் இருக்கும் பட்சத்தில், இதுபோன்ற வீடியோக்கள் வெறும் 1% மட்டுமே இருப்பதாகவும் செய்திகள் கூறுகிறது. இருப்பினும் தடுப்பூசிக்கு எதிராகவும், கொரோனா குறித்த தப்பான கருத்துக்களை கூறும் வீடியோக்களின் ஆதிக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து யுடியூப் தலைமை அதிகாரி நீல் மோகன் கூறியிருப்பதாவது,கொரோனா பற்றி தவறான செய்திகளை பகிர்ந்துள்ள, 10 லட்சம் வீடியோக்களை யுடியூப் நிறுவனம் டெலிட் செய்துள்ளது. இதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு காலாண்டிலும், 10 நபர்கள் கூட பார்க்காத ஒரு கோடி வீடியோக்கள் நீக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.