தோசை சுட்டு கொடுத்த அம்மாவை துப்பாக்கியால் சுட்ட மகன்: பரபரப்பு தகவல் 

  • IndiaGlitz, [Friday,July 24 2020]

பசியாக இருக்கும் மகனுக்கு சுடச்சுட தோசை சுட்டுக் கொடுத்த அம்மாவை அவரது மகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா அருகில் சீதாப்பூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு மஞ்சுதேவி மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் வசித்து வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் இரவு பத்தரை மணிக்கு மேல் யாதவ் தன் வீட்டு வாசலில் நின்றுகொண்டு நண்பர்களுடன் மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரது அம்மா தோசை சுட்டு எடுத்து வந்து அவரிடம் கொடுத்து ’சாப்பிட்டுவிட்டு அதன் பின்னர் போனில் பேசு’ என்றும், ’தோசை சூடு ஆறி விடும்’ என்று கூறியுள்ளார்.

ஆனால் அவர் அம்மாவின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனை அடுத்து மீண்டும் அவரது அம்மா ’தோசை ஆறிவிடும், முதலில் சாப்பிடு, அப்புறம் போன் பேசு என்று கண்டித்துள்ளார். இதனால் கடுப்பான யாதவ் இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து திடீரென அம்மாவை நோக்கி சுட்டு விட்டார்.

துப்பாக்கி குண்டால் சுருண்டு விழுந்த மஞ்சதேவியை அவரது உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து மஞ்சுதேவியின் மகன் யாதவ்வை கைது செய்துள்ளனர். மகன் பசியாக இருப்பதால் தோசை சுட்டுக் கொடுத்த அம்மாவை துப்பாக்கியால் சுட்ட வாலிபரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

More News

தமிழகத்தில் இன்று 6,785 பேர் பாதிப்பு, 6,504 பேர் மீண்டனர்: இரண்டுமே புதிய சாதனை

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,785 என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமல், சூரி மீன்படித்த விவகாரம்: 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் அனுமதியின்றி மீன் பிடித்ததாக நடிகர்கள் சூரி மற்றும் விமல் ஆகியோர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

கொரோனா வைரஸ் ஹேர்பின் வடிவத்துக்கு மாறுகிறதா??? சுவாரசியம் நிறைந்த ஆய்வுத் தகவல்!!!

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் வேகத்தை விட அதிவேகமாக அதன் தன்மை மற்றும் மரபணு போன்றவை மாற்றம் அடைந்து வருகின்றன என்பதை The Lancet ஆய்வு இதழ் எடுத்துக் காட்டியிருந்தது.

லாக்டவுனால் அதிகரித்த பாலியல் உபகரணங்கள் விற்பனை: தமிழகத்தில் படுஜோர் என தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா உள்பட சுமார் 200 நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கு நாட்களில் உலகம் முழுவதும் பாலியல் உபகரணங்கள்

இந்த அப்பளம் கொரோனா வைரஸை தடுக்க உதவும்- சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட பா.ஜ.க அமைச்சர்!!!

இந்தியாவின் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கனரக தொழில் துறை இணை அமைச்சரான அர்ஜுன் ராம் மேக்வால் தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும்