நான் தான் ஐஸ்வர்யா ராயின் மகன்.. என்னை 15 வயதில் பெற்றெடுத்தார்.. இளைஞர் வீடியோவால் பரபரப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நான் தான் ஐஸ்வர்யா ராயின் மகன் என்றும், என்னை அவர் 15வது வயதில் பெற்றெடுத்தார் என்றும் ஒரு இளைஞர் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளார். கடந்த சில மாதங்களாக அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், விரைவில் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன.
இந்த வதந்திக்கு இருவரும் எந்த பதிலும் சொல்லாத நிலையில், திடீரென சங்கீத் குமார் என்பவர், "நான் தான் ஐஸ்வர்யா ராயின் மகன். என்னை ஐஸ்வர்யா ராய் 15 வயதாக இருந்தபோது பெற்றெடுத்தார்," என்று கூறினார். "லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் IVF முறையில் பிறந்தேன்; பின்னர் ஐஸ்வர்யா ராயின் பெற்றோர்கள் என்னை விசாகப்பட்டினத்திற்கு அழைத்துச் சென்று வளர்த்தனர். நான் பிறந்ததற்கான எல்லா ஆதாரங்களும் அழிக்கப்பட்டுவிட்டன, இப்போது எந்த ஆதாரமும் என்னிடம் இல்லை," என்றும் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த வீடியோ நான்கு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது என இதன் உண்மைத்தன்மை குறித்து தெரிய வந்துள்ளது. வீடியோவில் பேசிய இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் கூறியவை முழுக்க முழுக்க பொய்யானவை என்றும் தெரிவிக்கப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout