வீட்டுக் கொல்லையில் சுரங்கம் தோண்டிய இளைஞர்: ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆனார்!!!
- IndiaGlitz, [Friday,June 26 2020]
ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த ஒரு ஏழை நாடு தான்சானியா. இந்நாட்டில் அதிகளவு கனிம வளங்கள் கிடைக்கின்றன. தங்கம், வெள்ளி, டைமண்ட், மரகத கற்கள் சாதாரணமாக இந்நாட்டில் கிடைப்பது வழக்கம். இவ்வளவு இருந்தும் இந்நாட்டு மக்கள் இன்னும் ஏழைகளாகத்தான் இருக்கின்றனர். காரணம் இயற்கை வளங்கள் இருப்பதாலே உலகின் பல நாடுகள் இந்நாட்டை சுரண்டுவதற்கு எப்போதும் ஆயத்தமாகவே இருக்கிறது. கடத்தல் போன்ற விவகாரங்களும் இந்நாடு மிகவும் பெயர்போனது.
இயற்கை வளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக சுரங்களை சுற்றி சுவர்களையும் அந்நாட்டு அரசு எழுப்பியுள்ளது. மேலும் 2018 முதல் தனியார் நிறுவனங்கள் சுரங்கம் தோண்டுவதற்கு அனுமதி மறுக்கப் படுகிறது. இதனால் மக்கள் தங்களது வீட்டின் கொல்லைப் புறத்திலேயே சுரங்களைத் தோண்டி கிடைக்கும் பொருட்களை வைத்து காசு பார்க்கின்றனர். சுரங்கத்தின் மூலம் கிடைக்கும் பொருட்களை அரசாங்கமே பெற்றுக்கொண்டு அதற்குரிய விலையை மக்களுக்கு கொடுத்து விடுகிறது. இப்படி தனது வீட்டுக் கொல்லையில் சுரங்கம் தோண்டிய ஒரு இளைஞர் ஒரே நாள் இரவில் கோடிஸ்வரர் ஆகியிருக்கிறார். சன்னியூ லைஸார் என்ற இளைஞர் தனது வீட்டின் கொல்லைப் புறத்தில் பல ஆண்டுகளாகவே சுரங்கம் தோண்டும் பணியில் இடுபட்டு இருக்கிறார். அப்படி ஜுன் 24 ஆம் தேதி இரவு சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டபோது அவருக்கு 2 மரகதக் கற்கள் கிடைத்து இருக்கிறது.
இதனால் பூரிப்பில் திளைத்த லைஸார் மரகத கற்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்து தற்போது இந்திய மதிப்பில் ரூ.25 கோடியை பரிசாக பெற்றிருக்கிறார். சுரங்கத்தில் தோண்டப்பட்ட கற்கள் கரு நீல நிறத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு கல் 10 கிலோ எடையிலும் இன்னொரு கல் 5 கிலோ எடையிலும் கிடைத்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. இதைத்தான் அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள் போல... எதோ ஒரு நம்பிக்கையில் தொடர்ந்து உழைத்து வந்த இளைஞர் இன்றைக்கு 25 கோடிக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.