மகள், மாமியார் இருவரையும் திருமணம் செய்து கொண்ட இளைஞருக்கு புதுவித சிக்கல்

  • IndiaGlitz, [Thursday,October 31 2019]

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்ற 20 வயது இளைஞர் ஒருவர் மகள், மாமியார் ஆகிய 2 பேரையும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ரமேஷ் என்ற இளைஞருக்கு 15 வயது ப்ரீத்தி என்ற மகளை திருமணம் செய்து வைக்க அவரது தாயார் முடிவு செய்தார். ஆனால் திருமண வயதை தனது மகள் ப்ரீத்தி எட்டாததால், திருமணத்தை பதிவு செய்யும் போது ப்ரீத்தியின் தாயார் மணமகள் பெயராக தன்னுடைய பெயரை பதிவு செய்துள்ளார். இதனால் பதிவேட்டின்படி ரமேஷுக்கும் ப்ரீத்தியின் தாயாருக்கும் திருமணம் நடந்ததாக ஆவணங்கள் உள்ளது.

இந்த நிலையில் ரமேஷ்-ப்ரீத்தி தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் ரமேஷ் வேலை விஷயமாக துபாய் சென்றுள்ளார். இந்த நிலையில் ப்ரீத்திக்கு அகில் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் கள்ளத்தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் துபாயில் இருந்து திரும்பி வந்த ரமேஷ், மனைவியின் கள்ளக்காதலை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ரமேஷ் போலீசில் புகார் செய்தபோது, ரமேஷ் என்பவரை தான் திருமணம் செய்யவே இல்லை என்றும் ரமேஷ் தனது தாயாரைத்தான் திருமணம் செய்தார் என்றும் ஆவணங்களுடன் போலீசில் விளக்கம் அளித்தார். இதனை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சட்டப்படி ப்ரீத்தி மீதும் அகில் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் போலீசார் திணறி வருவதாக கூறப்படுகிறது.