படுக்கையறை காட்சிகளை நேரலையில் ஒளிபரப்பி சம்பாதித்த கணவர் மீது புகார் அளித்த மனைவி!

  • IndiaGlitz, [Tuesday,October 27 2020]

இரண்டு மனைவிகளுடன் படுக்கை அறையில் தனிமையில் இருந்த காட்சிகளை நேரலையில் ஒளிபரப்பு செய்து இலட்சக்கணக்கில் சம்பாதித்த இளைஞர் ஒருவர் மீது காவல்துறையில் அவரது மனைவியே புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த போபால் என்ற பகுதியைச் சேர்ந்த இளைஞர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார். ஆனாலும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் உள்ள டேட்டிங் ஆப் பலவற்றில் கணக்கு உள்ளது

சமூக வலைதளம் மூலம் நட்பாகி பெங்களூரை சேர்ந்த ஒரு பெண்ணையும், ஆன்மிக வகுப்பில் நட்பாகி இரண்டாவது ஒரு பெண்ணையும் இவர் திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் தன்னுடைய இரண்டு மனைவிகளுடன் படுக்கையறையில் தனிமையில் இருக்கும் காட்சிகளை டேட்டிங் செயலியில் நேரடியாக ஒளிபரப்பி பணம் சம்பாதித்துள்ளார். இதற்காக ஒரு மெனு கார்டே தயார்த்து முகம் தெரிந்த வீடியோ காட்சிகள் என்றால் அதற்கு ஒரே ரேட், முகம் தெரியாமல் உறவு கொள்ளும் காட்சி என்றால் அதற்கு ஒரு ரேட் என லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளார்

இந்த இளைஞரின் இந்த செயலுக்கு முதல் மனைவி உடந்தையாக இருந்துள்ளார் என்பது தெரிகிறது. ஆனால் இரண்டாவது மனைவி இந்த செயலை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்து அவர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்