அப்பாவை வீட்டிற்கு வரவழைக்க தூக்கில் தொங்கிய 9ஆம் வகுப்பு மாணவன்!

  • IndiaGlitz, [Wednesday,April 15 2020]

700 கிமீ தூரத்தில் ஊரடங்கால் சிக்கியுள்ள அப்பாவை வீட்டிற்கு வரவழைக்க தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட 9ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் குறித்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த டெய்லர் ஒருவர் தனது குடும்பத்தை பிரிந்து 700 கிமீக்கு அப்பால் ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அவரால் தனது சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லை. இந்த நிலையில் தந்தையை பிரிந்து கவலையடைந்த அவரது 9ஆம் வகுப்பு படிக்கும் மகன், தான் தற்கொலை செய்து கொண்டால் தனது இறுதி சடங்கிற்கு எப்படியாவது அரசு தனது தந்தையை அழைத்து வந்துவிடுவார்கள் என்று நினைத்து தனது இறுதிச்சடங்கை தனது தந்தை தான் செய்ய வேண்டும் என்று விரிவான கடிதம் ஒன்றை அரசுக்கு எழுதி மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மகனின் கடைசி ஆசையை நிறைவேற்ற அவரது தந்தையை அரசு அழைத்து வரவேண்டும் என்று அவரது குடும்பத்தினர் காவல்துறையினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறியபோது, ‘மாணவன் தற்கொலைக்கு உண்மையான காரணம் தெரியவில்லை என்றும், தந்தையை பிரிந்ததால் அந்த மாணவன் மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறினர். இருப்பினும் அவரது தந்தையை அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்தனர்.