கொரோனா முகாமில் இருந்து தப்பி காதலியை சந்தித்த இளைஞர்!

கொரோனா வைரசை இந்தியாவில் இருந்து விரட்ட இந்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு சீரிய முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசிலரும், பொதுமக்களில் ஒரு சிலரும் பொறுப்பின்றி இருப்பதால் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது.

குறிப்பாக கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக அறிகுறி இருப்பவர்கள் கொரோனா முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் இந்த சிகிச்சையை ஏதோ சிறைவாசம் என எண்ணிக்கொண்டு ஒரு சிலர் கொரோனா முகாமில் இருந்து தப்பிக்க முயற்சித்து வரும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் மதுரையில் கொரோனா முகாமில் இருந்து தப்பிச் சென்ற இளைஞர் ஒருவரை போலீசார் கடந்த சில நாட்களாக தேடி வந்தனர். இதனை அடுத்து கொரோனா முகாமில் இருந்து தப்பிய அந்த இளைஞர் தனது காதலியை சந்தித்து விட்டு மீண்டும் கொரோனா முகாமுக்கு திரும்பி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதால் முகாமில் இருக்கும் அந்த இளைஞர் தப்பிச் சென்றதால் அவரது காதலி உட்பட இன்னும் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்குமோ என்ற அச்சத்தில் மருத்துவர்கள் உள்ளனர். இதுபோன்று பொறுப்பில்லாமல் இருப்பவர்களால் தான் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் இந்தியாவில் மிக வேகமாக அதிகரித்து கொண்டிருப்பதாக நெட்டிசன்கள் கடுமையாக அந்த இளைஞரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
 

More News

சமூக தனிமைப்படுத்துதலில் விஜய்யின் 'மாஸ்டர்' டீம்

தமிழகம் உள்பட இந்தியாவில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சமூகதனிமைப்படுத்துதலை அரசு வலியுறுத்தி வருகிறது.

பெப்சியை அடுத்து உதவிக்கரம் கேட்கும் சின்னத்திரை ஊழியர்கள்

பெப்சி தொழிலாளர்கள் படப்பிடிப்பு இல்லாததால் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு நடிகர், நடிகைகள் இயக்குனர்கள் உள்பட திரையுலக பிரபலங்கள் லட்சக்கணக்கில்

வெளி மாநில கூலி தொழிலாளர்களை கொடுமைப்படுத்திய உ.பி போலீசார்..!

வெளி மாநில தொழிலாளிகளுக்கு உதவ சொன்னால் இப்படி அவர்களை கொடுமைப்படுத்துகிறீர்களே என கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்: கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்

இந்தியாவிலேயே மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் மாநிலங்களில் ஒன்றாக கேரளா மாநிலம் மாறி வருவது கேரளா மக்களுக்கு மட்டுமின்றி அண்டை மாநிலமான தமிழகத்திற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது

தலைமுடியில் கொரோனா வைரஸ் தங்குமா??? மருத்துவர்களின் அறிவுரை!!!

கொரோனா வைரஸ் பொருட்களின் மேல் தங்கிவாழும் தன்மையுடையது என்ற அறிக்கை வெளியானதில் இருந்து எந்தப்பொருட்களில் எவ்வளவு நேரம் தங்குமோ என்