ஓட்காவை ஒரே மடக்கில் குடித்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

  • IndiaGlitz, [Saturday,February 12 2022]

அமெரிக்காவில் 19 வயது இளைஞர் ஒருவர் தன்னுடைய நண்பர்களின் வற்புறுத்தலைக் கேட்டு ஒரே மடக்கில் ஓட்காவை காலி செய்திருக்கிறார். இதனால் மூளைப் பாதிப்பு ஏற்பட்டு தவித்துவருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மினியா போலீஸ் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் டேனியல் சான்டுல்லி. இவர் கடந்த அக்டோபர் மாதம் மிசோரி பல்கலைக்கழகத்தின் விடுதியில் சேருவதற்காக அங்கு சென்றுள்ளார். அப்போது அவருடைய நண்பர்கள் சிலர் ஓட்காவை கொடுத்து உன்னால் ஒரே மடக்கில் குடிக்க முடியுமா? என்று சவால் விட்டுள்ளனர். இதைக் கேட்ட டேனியல் ஒரே மடக்கில் அதைக் குடித்து சவாலில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

ஆனால் ஓட்காவை குடித்த டேனியலுக்கு அவருடைய ரத்தத்தில் 6 மடங்கு ஆல்கஹால் ஒரே நேரத்தில் அதிகரித்ததாகவும் இதனால் அவருடைய மூளையில் பாதிப்பு ஏற்பட்டு தற்போது செயலிழக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் டேனியலுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் பல மாதங்களாக அவர் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வரும் நிலையில் டேனியலின் நிலைமை பார்த்து பொதுமக்கள் பலரும் அதிர்ச்சியை வெளியிட்டு வருகின்றனர்.

More News

திருமணத்தால் சர்ச்சை… சிறை தண்டனையை எதிர்நோக்கும் பங்களாதேஷ் வீரர்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான நசீர் ஹொசைன்

உயிரைப் பறித்த லாஸா காய்ச்சல்... கொரோனா மாதிரி பாதிப்பை ஏற்படுத்துமா?

வைரஸ் பெருந்தொற்று நோய்களுள் ஒன்றாகக் கருதப்படும் லாஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இங்கிலாந்தில் முதல் முறையாக

பூமியைப் போல இன்னொரு கிரகம் கண்டுபிடிப்பு… ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்!

சூரியனுக்கு மிக நெருக்கமாக சுற்றிவரும் ஒரு புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் தற்போது

'எனக்கு இந்த வேலை ரொம்ப முக்கியம்' விமலின் 'விலங்கு' 2வது டிரைலர்!

நடிகர் விமல் நடித்த வெப் தொடர் 'விலங்கு' பிப்ரவரி 18ஆம் தேதி ஜீ ஓடிடியில் வெளியாக உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்தத் தொடரின் முதல் டிரைலர்

பிக்பாஸ் அல்டிமேட்: இந்த வாரம் எலிமினேஷன் ஆனது இந்த போட்டியாளரா?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் முதல் நபராக சுரேஷ் சக்கரவர்த்தி கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே