டிக்டாக் வீடியோவுக்காக மீனை விழுங்கிய வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்

  • IndiaGlitz, [Friday,June 12 2020]

டிக்டாக்கில் வீடியோ பதிவு செய்து அதிக லைக்ஸ்களை பெறுவதற்காக பலர் ரிஸ்க் எடுத்து வருவதால் பெரும் விபரீதங்களும் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் டிக்டாக்கில் வீடியோ எடுப்பதற்காக மீனை விழுங்கியதால் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெற்றிவேல் என்ற 22 வயது வாலிபருக்கு திருமணமாகி இரண்டு வயதில் ஒரு மகன் உள்ளார். கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வரும் இவர் நேற்று தனது நண்பர்களுடன் மீன் பிடிக்கச் சென்றார். அப்போது அவர் போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் மீனைப் பிடித்து அதை விழுங்குவது போன்று வீடியோ எடுத்து அதை அப்படியே டிக்டாக்கில் பதிவு செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து அவர் மீனை விழுங்குவது போல் வீடியோ எடுத்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக, மீன் வாய்க்குள் சென்று விட்டது. அவர் விழுங்கிய மீன் சுவாசக்குழாயில் அடைத்து கொண்டதால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதனையடுத்து உடனடியாக அவரை நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் கூறியதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். டிக்டாக் வீடியோவுக்காக ரிஸ்க் எடுத்து மீனை விளங்கிய வாலிபர் ஒருவர் பரிதாபமாக மரணம் அடைந்ததால், அவருடைய மனைவியும் இரண்டு வயது மகனும் தற்போது திக்கற்ற நிலையில் இருப்பது அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது

More News

கொரோனா வைரஸ் பயம்: ஊரை மாற்றிய ஸ்ருதிஹாசன்

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலக நாயகன் கமலஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன்

கொரோனா பரிசோதனை செய்தாலே தனிமை: அரசின் அதிரடி அறிவிப்பால் சென்னை மக்கள் அதிர்ச்சி

கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் இன்று கூட தமிழகத்தில் 1875 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்

ராயபுரம் ஹோமில் 42 குழந்தைகளுக்கு கொரோனா: ராகவா லாரன்ஸ் உதவி

இந்த கொரோனா வைரஸ் நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என கோடிக்கணக்கில் தனது சொந்த பணத்தை நடிகர் ராகவா லாரன்ஸ்

தமிழகத்தில் வீரியம் ஆகியுள்ள கொரோனா வைரஸ்: அமைச்சர் அதிர்ச்சித் தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரை தினந்தோறும் மூன்று இலக்கத்தில் இருந்த கொரோனாவின் பாதிப்பு தற்போது கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

இரண்டாம் பாதியாவது சந்தோஷமா இருக்குமா? கவினின் புலம்பல் பதிவு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் பெரும் புகழ்பெற்ற நடிகர் கவின், அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பதை பார்த்து வருகிறோம்.