சைட்டில் பெண்களே இல்லை? டேட்டிங் ஆப் மீது வழக்குத் தொடுத்த பலே இளைஞர்!
- IndiaGlitz, [Wednesday,October 27 2021]
அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் பயன்படுத்தும் டேட்டிங் ஆப்பில் பெண்களே இல்லை, தரவுகளை மிகைப்படுத்திக் காட்டி தன்னை ஏமாற்றிவிட்டார்கள் எனக்கூறி டேட்டிங் வெப்சைட் மீது வழக்குத் தொடுத்து இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்காவின் டென்வர் பகுதியைச் சார்ந்தவர் இயான் கிராஸ். 29 வயதான இந்த இளைஞர் கொரோனா காலக்கட்டத்தில் உள்ளூரில் இயங்கிவரும் The Denver Dating Co. எனும் டேட்டிங் ஆப்பை தரவிறக்கம் செய்துள்ளார். மேலும் இந்த ஆப்பை தொடர்ந்து பயன்படுத்துவதற்கும் தடையின்றி சேட்டிங் செய்வதற்கும் மெம்பர்ஷிப் பெற வேண்டும் என்று செயலி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதோடு டென்வர் டேட்டிங் ஆப்பில் 25-35 வயதிற்குட்பட்ட பெண்கள் அதிகளவில் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதை நம்பிய இயான் கிராஸ் 9,409 டாலர்கள் செலவு செய்து டென்வர் செயலியின் மெம்பர்ஷிப்பை பெற்றுள்ளார். ஆனால் இந்த செயலியில் 35 வயதிற்கும் கீழுள்ள பெண்களின் எண்ணிக்கை வெறும் 5 என்பதை விரைவிலேயே தெரிந்துகொண்டார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த இயான் கிராஸ் தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள புகாரில் டேட்டிங் ஆப்பில் அதிகளவில் பெண்கள் இருப்பதாகக் கூறிய நிர்வாகம் தரவுகளை மிகைப்படுத்திக் காட்டி என்னை ஏமாற்றியிருக்கிறது. இதனால் எனக்கு நஷ்டஈடு வழக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் இயான் கிராஸ் டென்வர் டேட்டிங் ஆப்பிற்கு செலுத்திய பணம் இந்திய மதிப்பில் ரூ.7.5 எனத் தெரிந்து கொண்ட நம்முடைய நெட்டிசன்கள் கடும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.