சென்னை பெண் தொழிலதிபரின் ஆபாச படத்தை வைத்து மிரட்டிய வாலிபர்: வளைத்து பிடித்த கணவர்!

  • IndiaGlitz, [Monday,October 05 2020]

சென்னை பெண் தொழிலதிபர் ஒருவரின் ஆபாச படத்தை வைத்துக்கொண்டு மிரட்டியதோடு அவரை ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்திய வாலிபர் ஒருவரை பெண் தொழிலதிபரின் கணவர் வளைத்துப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னையை சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவருடன் ரத்தினகுமார் என்ற வாலிபர் போன் மூலம் பழகி உள்ளார். அவரது இனிமையான பேச்சுக்கு மயங்கிய பெண் தொழிலதிபர் அவரிடம் தன்னுடைய அந்தரங்க விஷயங்களை கூறியுள்ளார், அதில் திருமணத்துக்கு முன்பே தனக்கு வேறொருவரிடம் காதல் இருந்தது குறித்தும் தெரிவித்துள்ளார்

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரத்தினகுமார் அந்த பெண் தொழில் அதிபரை மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்துள்ளார். பணம் கொடுக்காவிட்டால் அவரது கணவரிடம் அவருடைய முந்தைய காதலை கூறி விடுவேன் என்று மிரட்டி உள்ளதாக தெரிகிறது. அது மட்டுமின்றி ஆபாச நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறும் ஆசைக்கு இணங்குமாறு மிரட்டிய ரத்தினகுமார், லட்சக்கணக்கில் பணம் கேட்டு தொல்லை செய்ததாகவும் தெரிகிறது

இதனை அடுத்து ஒரு கட்டத்தில் ரத்தினகுமாரின் அடுக்கடுக்கான டார்ச்சர்களை கண்டு அதிர்ச்சி அடைந்த பெண் தொழில் அதிபர் தனது கணவரிடம் நடந்தது அனைத்தையும் கூறியுள்ளார். இதனையடுத்து தனது நண்பர்களுடன் திட்டமிட்ட அவரது கணவர், ரத்தினகுமாரை ஆதாரத்துடன் வளைத்துப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். காவல்துறையினர் ரத்தினகுமார் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் பெண் தொழில் அதிபரிடம் மட்டுமின்றி பல பெண்களை ரத்தினகுமார் ஏமாற்றி உள்ளார் என்றும் ஒரு சில பெண்களிடம் பெண் வேடமிட்டு ஏமாற்றி உள்ளதும் தெரியவந்தது. இதனை அடுத்து ரத்தினகுமாரிடம் மேலும் பல பெண்கள் ஏமாந்து இருக்கலாம் என்ற ரீதியில் தற்போது விசாரணை நடந்து வருகிறது