16 வயது மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு என்ற பகுதியை சேர்ந்த ஐயப்பன் - சரண்யா தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கொத்தனார் வேலை பார்த்து வந்த ஐயப்பன், கேரளாவில் புதிதாக காண்டிராக்ட் வேலை எடுத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சரண்யாவின் தங்கை அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலிப்பதாகவும், தங்களை சேர்த்து வைக்குமாறு தனது அக்காள் கணவர் ஐயப்பனின் உதவியை நாடியுள்ளார்.

இதனை பயன்படுத்திக்கொண்ட ஐயப்பன், இதை வைத்து பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது மனைவியின் தங்கையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும், இதனால் அந்த மாணவி கர்ப்பம் அடைந்ததாகவும் தெரிகிறது.

இதுகுறித்து ஐயப்பனிடம் அந்த மாணவி தெரிவிக்க, உடனே அதற்கு ஐயப்பன் காதலன் ஏமாற்றி விட்டதாக மருத்துவர்களிடம் கூறும்படி மிரட்டி, மருத்துவமனைக்கு கருவை கலைக்க அழைத்து சென்றுள்ளார். அங்கு மாணவியை பரிசோததித்த மருத்துவர்கள், மாணவி 16 வயதுடையவள் என்பதை அறிந்து போலீசுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து ஐயப்பன் மருத்துவமனையில் இருந்து தலைமறைவாகி விட்டார்.

இதனையடுத்து அந்த மாணவியை போலீசார் விசாரணை செய்தபோது தனது கர்ப்பத்திற்கு காரணம் தனது அக்காள் கணவர் என்பதையும் நடந்தவற்றையும் கூறியுள்ளார். இந்த நிலையில் தலைமறைவான ஐயப்பனை போலீசார் கைது செய்து விசாரித்தபோது கடந்த ஆறு மாதங்களாக மனைவியின் தங்கையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

More News

மாம்பழ கூடையுடன் ஜெயலலிதா சமாதிக்கு வந்த நடிகை!

ஒவ்வொரு தேர்தலின்போது அதிமுகவுக்காக தீவிர பிரச்சாரம் செய்யும் நடிகர், நடிகைகளில் ஒருவர் நடிகை விந்தியா. மற்ற நட்சத்திரங்களின் பேச்சை விட இவருடைய பேச்சு ஆணித்தரமாகவும் அழுத்தமாகவும் இருக்கும்

தாய்க்கு மறுமணம் செய்து வைத்த இளைஞருக்கு குவியும் பாராட்டுக்கள்

ஒரு பெண்ணுக்கு மறுமணம் என்பதை இன்னும் இந்த சமூகம் முழுமையாக ஏற்றுக்கொள்ளாத நிலையில் ஒரு இளைஞர் தனது தாய்க்கு மறுமணம் செய்து வைத்துள்ளார்.

கார்த்தி படக்குழுவினர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா!

கார்த்தி நடித்து முடித்துள்ள 'கைதி' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில்

நடிகர் விஷாலுடன் பள்ளி சிறுமியை இணைத்து ஆபாச பதிவு செய்த பெண் கைது

நடிகர் விஷாலுடன் பள்ளிச்சிறுமி ஒருவரை ஆபாசமாக இணைத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அப்படியெல்லாம் நடக்காது, நடக்கவும் கூடாது: 'நேர் கொண்ட பார்வை டிரைலர்விமர்சனம்:

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கிய 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் சற்றுமுன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது