திருநங்கையுடன் வாலிபருக்கு காதல்: திடீரென தூக்கில் தொங்கிய காதல் ஜோடி

  • IndiaGlitz, [Saturday,June 20 2020]

30 வயது திருநங்கையை ஆசை ஆசையாய் காதலித்த 26 வயது வாலிபர் ஒருவர் திடீரென திருநங்கை காதலியுடன் தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த காரைக்கால் என்ற பகுதியில் பகுதியை சேர்ந்தவர் 26 வயது திலீப். இவர் அதே பகுதியை சேர்ந்த 30 வயது ஷிவானி என்ற திருநங்கையை காதலித்தார். இருவருக்கும் கடந்த ஆறு மாதங்கள் மட்டுமே பழக்கம் என்றாலும் ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

ஆனால் திலிப்பின் பெற்றோர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் மகன் ஒரு திருநங்கையை காதலிப்பதா? என்று அவர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் திலீப் மனமுடைந்தார். இதனை அடுத்து அவர் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி ஷிவானியை அழைத்துக் கொண்டு தனியாக வீடு அமர்த்தி இருவரும் குடித்தனம் நடத்தி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் திடீரென திலீப் மற்றும் ஷிவானி ஆகிய இருவரும் தங்கள் வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து அக்கம்பக்கத்தில் போலீசார் விசாரித்தபோது இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்ததாக கூறியுள்ளனர். ஆசை ஆசையாய் காதலித்தவர்கள் ஒருசில நாட்களில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கடைசியில் தூக்கில் தொங்கி உயிரையும் மாய்த்து கொண்டது காரைக்கால் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.