ஷாப்பிங் அழைத்து செல்ல மறுத்த காதலன் மீது ஆசிட் வீசிய காதலி

  • IndiaGlitz, [Thursday,November 28 2019]

தன்னுடன் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்றும், அடிக்கடி ஷாப்பிங் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் காதலி வலியுறுத்திய நிலையில் அதற்கு மறுத்த காதலன் மீது காதலி ஆசிட் வீசிய சம்பவம் ஒன்று ஒடிசா மாநிலத்தில் நடந்துள்ளது.

ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த பாரிக் என்பவர் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் அவ்வப்போது சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அடிக்கடி தன்னிடம் பேச வேண்டும் என்றும், ஷாப்பிங் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும், தான் விரும்பியதை எல்லாம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றும் காதலி முரண்டு பிடித்துள்ளதாக தெரிகிறது. இதனால் இந்தப் பெண் தனக்கு ஒத்து வர மாட்டார் என்று அந்த பெண்ணிடம் இருந்து விலகிச் செல்ல ஆரம்பித்து விட்டார் பாரிக்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் ஒரு நாள் சலூன் கடைக்கு நேரில் வந்து பாரிக்கிடம் பேசவேண்டும் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து அவர் அந்த பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென அந்தப் பெண், தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து பாரிக் மீது வீசினார். இதனால் முகம், மார்பு பகுதிகளில் படுகாயமடைந்த பாரிக்கை, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் ஆசிட் வீசிய பெண்ணை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

More News

30ஆம் தேதிக்கு மேல் 'வச்சு செய்யப்போகுது மழை': தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்றிரவு கனமழை பெய்த நிலையில் இதெல்லாம் ஒரு மழையே இல்லை, இனிமேல் தான் சென்னைக்கு பலத்த மழை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

கல்லா பெட்டியில் கைவைக்காமல் வெங்காயத்தை மட்டும் திருடிய திருடர்கள்

நகைக் கடைகளில் திருடுபவர்கள் கல்லாப்பெட்டியை கண்டுகொள்ளாமல் தங்கம் மற்றும் வைர நகைகளை திருடுவதில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

கமல்ஹாசன் சிகிச்சை குறித்து மக்கள் நீதி மய்யம் முக்கிய அறிவிப்பு!

உலக நாயகனும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய வீட்டில் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்ததால்

கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து கொண்டிருந்த நிலையில் நேற்று இரவு சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது

வெப் சீரீஸ் லிஸ்ட்டில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை!

திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களுக்கு இணையாக தற்போது வெப்சீரிஸ்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.