அண்ணியுடன் உல்லாசமாக இருந்த கணவர்: திருமணமான 4 மாதத்தில் தற்கொலை செய்த மனைவி!

  • IndiaGlitz, [Thursday,January 23 2020]

திருமணமான 4 மாதத்தில் தனது கணவர் அவரது அண்ணியுடன் உல்லாசமாக இருப்பதை கண்டுபிடித்த புதுமணப்பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அருள் என்பவருக்கும் பண்ருட்டியை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. அருள் சென்னையில் காவல் துறையில் பணிபுரிந்து வருவதால் இருவரும் சென்னையில் குடியிருந்து வந்தனர்

இந்த நிலையில் ராஜேஸ்வரி கணவர் அருளுக்கும் அவரது அண்ணிக்கும் தகாத உறவு இருந்தது என கூறப்படுகிறது. அண்ணியின் ஆபாச படத்தை மனைவியிடமே காட்டி எங்கள் இருவரின் உறவுக்கு நீதான் இடைஞ்சலாக இருக்கிறாய் என்று கூறி அருள், ராஜேஸ்வரியை சித்திரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி தனது தம்பியுடன் போனில் இதுகுறித்து கூறி அழுதுள்ளார். போனில் ஆறுதல் கூறிய அவரது சகோதரர் உடனடியாக தனது அக்காவை அழைத்து செல்வதற்காக சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென ராஜேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து ராஜேஸ்வரியின் தம்பி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அந்த புகாரில் தனது அக்காவை அவரது கணவர் கொடுமைப்படுத்தியதாகவும், தனது அக்காவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் இது குறித்து தீவிர விசாரணை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த மனு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

More News

ரஜினி இனிமே உயிரோடவே இருக்க முடியாது: பெரியாரிஸ்டுகள் ஆவேசம் 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் ஆண்டு விழாவில் பேசியபோது பெரியார் குறித்து கூறிய ஒரு சில கருத்துக்கள் பெரும் சர்ச்சையாகி உள்ளது.

தெருவில் போவோர் வருபவர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்த பிரபல நடிகை!

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 21ஆம் தேதி உலகம் முழுவதும் கட்டிப்பிடி வைத்தியம் கடைபிடிக்கப்பட்டு வருவது பலருக்கும் தெரிந்ததே.

உலக நாயகனை சந்தித்த ஒரு கோடி ரூபாய் வின்னர்!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாற்றுத் திறனாளி கௌசல்யா என்பவர் சமீபத்தில் ஒரு கோடி பரிசை வென்றுள்ளார்

அமலாபாலுக்கு தற்காப்புக்கலையை கற்றுக்கொடுத்த நடிகர் யார் தெரியுமா?

நடிகை அமலாபால் நடித்த 'அதோ அந்த பறவை போல' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தில் அமலாபால் 'க்ராவ் மகா' என்ற தற்காப்பு கலையை பயன்படுத்தியுள்ளார்

'மாஸ்டர்' படத்துடன் மோதும் பிரபல நடிகரின் படம்!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உருவாகி வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது