நானும் கான்ஸ்டபிளும் தப்பு செஞ்சோம்: ஒரு இளம்பெண்ணின் ஆடியோ வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நானும் கான்ஸ்டபிள் ஒருவரும் தப்பு செய்துவிட்டோம், ஆனால் தற்போது அவர் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார் என இளம்பெண் ஒருவரின் ஆடியோ வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னையைச் சேர்ந்த 24 வயது சரஸ்வதி என்பவர் போலீஸ் வேலையில் சேர்வதற்காக கிரவுண்டில் பிராக்டீஸ் செய்துள்ளார். அதே போலீஸ் வேலைக்காக பிராக்டீஸ் செய்ய வந்த வீரமணி என்பவருக்கும் சரஸ்வதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாகவும் அதன்பின் ஒருமுறை சரஸ்வதியை வீட்டுக்கு அழைத்துச் சென்ற வீரமணி அவருடன் சந்தோஷமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது
பின்னர் போலீஸ் வேலைக்கான ரிசல்ட் வந்த போது வீரமணி மட்டும் போலீஸ் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டார். சரஸ்வதி .தேர்வு செய்யப்படவில்லை. இதனை அடுத்து சரஸ்வதியை விரமணி ஒதுக்கியதாக தெரிகிறது. மேலும் தனது மகன் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்காக முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் அவருக்கு வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்கப் போவதாகவும் வீரமணி குடும்பத்தினர்களும் சரஸ்வதியை மிரட்டியுள்ளனர்
இந்த விவகாரம் சரஸ்வதி வீட்டினருக்கு தெரிந்து அவர்களும் சரஸ்வதியை வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இப்போது சரஸ்வதி தான் தங்குவதற்கு கூட இடமில்லாமல் கஷ்டப்படுவதாகவும் தன்னை காதலித்து ஏமாற்றிய வீரமணி தன்னை கைவிட்டு விட்டதாகவும் சென்னை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்
அத்துடன் அவர் வீரமணியுடன் பேசிய ஆடியோ ஒன்றையும் கொடுத்துள்ளார். அந்த ஆடியோவில் அவர் இருவரும் தப்பு செய்ததை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அதற்கு வீரமணி சமாதானம் செய்வது போலவும் உள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout