நிர்வாணமாக நடித்த தமிழ் நடிகைக்கு கொலை மிரட்டல்
Send us your feedback to audioarticles@vaarta.com
நிர்வாணமாக நடித்த தமிழ் நடிகை ஒருவருக்கு மர்ம தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளதாக சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
18.05.2018 என்ற தமிழ்ப்படத்தில் நடித்த நடிகை தன்யா. இவர் தனது தாயாருடன் சென்னை வடபழனி பகுதியில் வசித்து வருகிறார். இவர் மேற்கண்ட படத்தின் கதையின் முக்கியத்துவம் கருதி ஒருசில காட்சிகளில் நிர்வாணமாக நடித்துள்ளாராம். இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி நள்ளிரவு நடிகை தன்யாவுக்கு மர்ம செல்போன் அழைப்பு ஒன்று வந்த்தாகவும் அதில் நிர்வாணமான நடித்த அவரை கொலை செய்வதாக மிரட்டியுள்ளதாகவும் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து காவல்துறையினர் விரைவில் விசாரணை செய்யவுள்ளனர்.
18.05.2018 என்ற பெயரில் ஒரு திரைப்படம் இருப்பதாக இதுவரை பலர் கேள்விப்படாத நிலையில் விளம்பரத்திற்காக இந்த புகார் கொடுக்கப்பட்டதா? அல்லது உண்மையிலேயே மிரட்டல் வந்துள்ளதா? என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments