திருமணமான 3 மாதங்களில் மனைவி தற்கொலை: விரக்தியில் டிரான்ஸ்பார்மரில் ஏறிய கணவனால் பரபரப்பு

  • IndiaGlitz, [Wednesday,January 08 2020]

திருமணமான 3 மாதத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டதால் விரக்தியடைந்த கணவன் டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த சக்தி என்ற ராணுவ வீரருக்கும் மோனிஷா என்ற பெண்ணுக்கும் நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த ஒரு சில நாட்களில் சக்தி இராணுவ பணிக்கு சென்றுவிட்டார் இதனை அடுத்து மோனிஷா மட்டும் மாமியாருடன் தனியாக இருந்ததாகவும் அப்போது அவரை அவரது மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் கூறபடுகிறது.

இந்த நிலையில் விடுமுறைக்கு ஊருக்கு வந்த சக்திக்கு தனது மனைவி தனது அம்மாவால் கொடுமைபட்டது தெரிந்தது. இந்த நிலையில் திடீரென கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மோனிஷா தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. திருமணமான ஒரு சில மாதங்களில் மோனிஷா தற்கொலை செய்து கொண்டதால் இது குறித்து ஆர்டிஓ விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைக்காக மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு சக்தியும் அவரது குடும்பத்தினர்களும் இன்று வந்திருந்தனர்.

இந்த நிலையில் சக்தி திடீரென அங்கு உள்ள டிரான்ஸ்பார்மரில் ஒன்றில் ஏறி தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கை மின்கம்பத்தில் பட்டதால் மின்சாரம் தாக்கி தூக்கி அடிக்கப்பட்டார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை நடந்து வருவதாகவும் இருப்பினும் அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

More News

எங்களையும் இந்தி படங்களை பார்க்க வைத்து விடுவார்களோ? கனிமொழி எம்பி

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் ஜே.என்.யூ மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'நான் சிரித்தால்' சென்சார் தகவல்!

இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த 'மீசையை முறுக்கு' மற்றும் 'நட்பே துணை' ஆகிய இரண்டு திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் குவித்து வெற்றி படமானது என்பது தெரிந்ததே 

என்னைப் பற்றி பேசுங்கள்.. குடும்பத்தை இழுக்காதீர்கள்..! ரோஹித் ஷர்மா.

என்னைப் பற்றிப் பேசுங்கள். ஆனால் என் குடும்பத்தை இதில் இழுக்காதீர்கள். எனது குடும்பத்தினர் வேறு எதையும் பற்றி உண்மையிலேயே அக்கறை காட்டாததால் அவர்களை இதில் இழுக்க வேண்டாம்.

என்னைப் பற்றி பேசுங்கள்.. குடும்பத்தை இழுக்காதீர்கள்..! ரோஹித் ஷர்மா.

என்னைப் பற்றிப் பேசுங்கள். ஆனால் என் குடும்பத்தை இதில் இழுக்காதீர்கள். எனது குடும்பத்தினர் வேறு எதையும் பற்றி உண்மையிலேயே அக்கறை காட்டாததால் அவர்களை இதில் இழுக்க வேண்டாம்.

உங்கள் ஃபேஸ்புக் கணக்கு இன்னும் பாதுகாப்பாக போகிறது..வருகிறது புதிய அப்டேட்.

2014ல் ஃபேஸ்புக் பயனாளர்களுக்கான பிரைவஸி அமைப்புகள் (Privacy Checkup tool) அறிமுகப்படுத்தப்பட்டன. இதை இன்னும் மேம்படுத்திய வெர்ஷன் தற்போதுவெளியிடப்பட்டுள்ளது.