ஏழைச் சிறுவனின் கல்விக்கு கைக்கொடுக்கும் இளம் காவல் அதிகாரி!!! நெகிழ்ச்சி சம்பவம்!!!

  • IndiaGlitz, [Monday,July 27 2020]

 

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் உள்ள பலாசியா காவல் நிலையத்தில் பணியாற்றும் இளம் காவல் அதிகாரி வினோத் தீக்ஷித். இவர் கொரோனா பரவல் ஆரம்பித்ததில் இருந்தே ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார். அப்படி பணியில் இருந்தபோது 12 வயதுடைய ராஜு என்ற சிறுவன் அவரை சந்தித்து எனக்கு உங்களைப்போல நானும் ஒரு காவல் அதிகாரியாக ஆக வேண்டும் என்று ஆசையோடு கேட்டிருக்கிறான். உடனே வினோத் உன்னுடைய அப்பா என்ன செய்கிறார் எனக் கேட்டிருக்கிறார். அப்பா சாலையில் டிபன் கடை வைத்திருக்கிறார். தாத்தா சாலை வியாபாரியாக இருந்து வருகிறார். உடனே மனம் நெகிழ்ந்து போன வினோத் பரவாயில்லை உனக்கு நானே தினமும் டியூசன் சொல்லிக் கொடுக்கிறேன். நீ கண்டிப்பாக ஒரு அதிகாரியாக வரமுடியும் எனத் தன்னம்பிக்கை கொடுத்து இருக்கிறார்.

இதற்காக தினமும் வேலை நேரம் முடிந்தவுடன் மாலையில் ஆசிரியராக மாறி அச்சிறுவனுக்கு பாடங்களைச் சொல்லிக் கொடுக்கிறார் வினோத். கடந்த ஒரு மாதங்களாக ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களை சொல்லிக் கொடுத்ததாகவும் வினோத் செய்தியாளர்களிடம் தெரிவித்து இருக்கிறார். சிறுவனிடன் ஆர்வமும் கடின உழைப்பும் இருக்கிறது. கண்டிப்பாக ஒரு நல்ல அதிகாரியாக வருவான் என்றும் தெரிவித்து இருக்கிறார். இச்சம்பவத்தால் இளம் காவல் அதிகாரிக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்த வருகின்றனர்.

More News

அமிதாப் குடும்பத்தின் இருவர் டிஸ்சார்ஜ்: ரசிகர்கள் வாழ்த்து

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்

டிக்டாக் தடையோடு கணக்கு முடியல… பப்ஜி உள்ளிட்ட பெரிய லிஸ்டே இருக்கு… பரபரப்பு தகவல்!!!

கடந்த சில மாதங்களாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே இருந்து வரும் எல்லைப் பிரச்சனையில் இன்னும் தீர்க்கமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை

கொரோனா பரவல் தடுப்பு: அரிசியோடு சேர்த்து மாஸ்க் வழங்கும் தமிழக அரசு!!!

கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு சார்பில் அனைத்துக் குடிமக்களுக்கும் இலவசமாக மாஸ்க் வழங்கப்படும் என சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

அடுத்த அமெரிக்க அதிபர் இவர்தான்… கருத்துக் கணிப்பில் வெளியான சுவாரசியத் தகவல்!!!

அமெரிக்காவில் கொரோனா பெருந்தொற்றுக்கு நடுவிலும் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்திருக்கிறது.

ஆன்லைன் விளையாட்டில் தோல்வி: விரக்தியில் சென்னை கல்லூரி மாணவர் தற்கொலை

ஆன்லைன் விளையாட்டில் தோல்வி அடைந்ததால் ஏற்பட்ட விரக்தியில் சென்னை கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது