இளம் வீரர்களின் தோனி பாசம்: நெகிழ வைக்கும் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருடம் ஐபிஎல் போட்டி தொடரில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாவிட்டாலும் தல தோனி மீது உள்ள அன்பு சிறிதளவுகூட ரசிகர்களுக்கு குறையவில்லை என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி தோனி மீது மற்ற அணிகளின் வீரர்களும் மரியாதை நிமித்தமாக போட்டி முடிந்தவுடன் சந்தித்து அவரது ஆலோசனையை பெற்று வருகின்றனர்.
அந்தவகையில் நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டி முடிந்தவுடன் தோனியை சந்தித்த கொல்கத்தா அணியின் வீரர்களான ரிங்கு, குல்தீப் யாதவ், நிதிஷ் ரானா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் சந்தித்து அவரிடம் ஆலோசனை கேட்டனர். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் தோனியின் சிஎஸ்கே ஜெர்சியை அவரிடம் இருந்து பரிசாக பெற்று அதில் அவரது கையெழுத்தையும் வாங்கி கொள்கின்றானர். இளம் வீரர்கள் தோனி மீது வைத்திருக்கும் பாசம், நெகிழ வைக்கும் அளவிற்கு இருக்கும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
Priceless memories, prized possessions. Signature #Thala. ???? #WhistlePodu #Yellove #WhistleFromHome #CSKvKKR pic.twitter.com/fHerQ1CYly
— Chennai Super Kings (@ChennaiIPL) October 30, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments