கார்த்தியின் 'ஜப்பான்': ஜிவி பிரகாஷ் உடன் இணைந்த பிரபல இசையமைப்பாளர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்தியின் நடிப்பில் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகிய ’ஜப்பான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த படம் தீபாவளி அன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்தது. மேலும் இந்த படத்தின் கதை திருவாரூர் முருகன் நகைக்கடை கொள்ளையை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கார்த்திக் ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்துள்ள இந்த படத்தில் விஜய் மில்டன், சுனில் உட்பட பல நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றை சமீபத்தில் கம்போஸ் செய்ததாக கூறியுள்ள ஜீவி பிரகாஷ் குமார், அந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் சீன் ரோல்டன் பாடியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய கம்போசிங்கில் மிகச்சிறந்த மெலடி பாடல்களில் ஒன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த பாடலை பாட தனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி என்று கூறியுள்ள சீன் ரோல்டன் மிக அருமையாக கம்போஸ் செய்யப்பட்ட பாடல் என்றும் யுகபாரதியின் வரிகள் மிகவும் சிறப்பு என்றும் இந்த பாடல் நிச்சயம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Really happy to have sung for brother @gvprakash. Beautiful composition. Have loved your work for a longtime. What a song to start this collab. Not to mention @YugabhaarathiYb’s lyrics Can’t wait for people to hear it ! Love u bro💥 https://t.co/V8LeWwTrFm
— Sean Roldan (@RSeanRoldan) July 31, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com