படுக்கையறைகளை மட்டும் எட்டிப்பார்க்கும் மர்ம இளைஞர்: சிசிடிவி வீடியோவால் பரபரப்பு

  • IndiaGlitz, [Saturday,January 18 2020]

கோவை அருகே மர்ம இளைஞர் ஒருவர் ஒருசில வீடுகளின் படுக்கை அறைகளை மட்டும் எட்டிப்பார்ப்பது போன்று இருக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் என்ற பகுதியில் சில நாட்களாக அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவரின் நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்டது. இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி வீடியோக்களை ஆய்வு செய்தபோது ஒரு மர்ம இளைஞர் ஒரு சில வீடுகளில் படுக்கை அறையை மட்டும் எட்டிப்பார்த்து செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் உள்ளன. இவர் படுக்கை அறையை எட்டிப் பார்ப்பதோடு, வீடியோவும் எடுத்தாரா? என்பது போன்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இரவு 10 மணிக்கு மேல் இருசக்கர வாகனத்தில் வரும் இந்த மர்ம நபர் ஒருசில வீடுகளை மட்டும் குறிவைத்து அந்த வீடுகளின் சுவர் ஏறி குதித்து மிகச்சரியாக படுக்கை அறைஜன்னலின் திரைச்சீலையை திறந்து படுக்கை அறைகளை எட்டிப் பார்த்து செல்வது அந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. படுக்கை அறையை மட்டும் எட்டிப்பார்க்கும் அந்த மர்ம நபர் யார்? என்ற கேள்வி அந்த பகுதியினர்களிடையே எழுந்துள்ளது. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

More News

நாயுடன் செல்பி: இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்

இன்றைய இளைஞர்களிடம் செல்பி மோகம் மிகவும் அதிகம் உள்ளது என்பதும் மிகவும் ஆபத்தான இடங்களில் செல்பி எடுத்து ஆபத்தில் மாட்டிக் கொள்வதும் சில சமயம் உயிரிழப்பதுமான சம்பவங்கள்

எதிர்பாராத சந்திப்பு: பிரபல அரசியல்வாதி சந்திப்பு குறித்து மீராமிதுன்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சியிலும் சரி, அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னரும் சரி, மீராமிதுன் ஒரு சர்ச்சைக்குரியராகவே காணப்பட்டார். அவர் அளித்த பேட்டிகள், கூறிய கருத்துக்கள்

சூர்யாவின் 'சூரரை போற்று' புதிய அப்டேட் தந்த ஜிவி பிரகாஷ்!

நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிவரும்  'சூரரை போற்று'படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே 

த்ரிஷா நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலில் '96' கனெக்சன்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியுடன் நடிகை த்ரிஷா நடித்த '96' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது இந்த படத்தில் இடம்பெற்ற ராம் மற்றும் ஜானு கேரக்டரை படம் பார்த்த யாராலும்

அடிமுறை'க்காக சினேகா செய்த அர்ப்பணிப்பு

தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகிய 'பட்டாஸ் திரைப்படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.