ஒரே காதலில் 2 மாங்கா....!   அம்புவிட்ட அர்ஜுனனுக்கு அடித்த லக்.....!

  • IndiaGlitz, [Saturday,June 19 2021]

அத்தை மகள்கள் இருவரின் காதல் பிடிவாதத்தால், ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ளார் மாமன் மகன்.

தெலுங்கானா மாநிலத்தில், ஆதிலாபாத் மாவட்டம் கான்பூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் தான், ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் அர்ஜுன். இவர் தனது அத்தை மகள்களான சுரேகா மற்றும் உஷாராணி ஆகியோருக்கு, ஒருவரை அறியாமல் மற்றொருவருக்கு, மாற்றி மாற்றி காதல் அம்பு விட்டுள்ளார். காதலில் விழுந்த இரண்டு அத்தை மகள்களும், மாமன் மகனை உண்மையாக காதலித்து வந்துள்ளனர். சென்ற 3 வருடங்களாக நடந்து வந்த இந்த காதல் விஷயம், குடும்பத்தாருக்கு தெரிய அவர்கள் கூடி பேச்சு வார்த்தை நடத்தி வந்துள்ளனர்.

அத்தை மகள்கள் இருவரும், அர்ஜுன் தான் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததால், குடும்பத்தார் இரு பெண்களையும் அவருக்கே திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்தனர். ஆதிவாசிகளான இவர்கள் முதல் முறையாக தங்கள் பரம்பரை வழக்கத்தை மாற்றி, இந்த முடிவை எடுத்துள்ளனர். இவர்களின் திருமணம் சென்ற வாரம் குடும்பத்தார் மத்தியில் ஆடலுடன் மகிழ்ச்சியாக நடந்து முடிந்தது. பலருக்கும் மணமகளே கிடைக்காத நிலையில், ஒரே மேடையில், இரு பெண்களை கரம் பிடித்த மணமகனின் செயல் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 90'ஸ் கிட்ஸ் பலரும் புலம்பி கமெண்டுகளை குவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்த நடிகரின் மனைவி: திமுகவில் இணைகிறாரா?

பிரபல தமிழ் நடிகர் ஒருவரின் மனைவி முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை பாராட்டிய நிலையில் அவர் விரைவில் திமுகவில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

காஜல் அகர்வால் விரைவில் குழந்தை பெற்று கொள்ள வேண்டும்: வேண்டுகோள் விடுத்தது யார் தெரியுமா?

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால் என்பதும், இவர் மும்பையை சேர்ந்த கௌதம் என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்

"யுடியூப் டான் மதன்", டம்மி பீஸ் ஆனது  எப்படி...!கோபித்தவனுக்கு குட்டு வைத்த போலீஸ்....!

யுடியூபர் மதன்  தருமபுரியில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, காவல் துறையினர் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய்யை தலைமையேற்க அழைக்கும் முதல்வர் ஸ்டாலின்: வைரல் போஸ்டர்!

தளபதி விஜய்யின் பிறந்தநாள் வரும் 21 ஆம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் கடந்த இரண்டு நாட்களில் இருந்தே விஜய் ரசிகர்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர் என்பதும்

சண்டைக்கு அழைத்த அண்டர்டேக்கருக்கு அக்சயகுமார் கூறிய காமெடி பதில்!

எப்போது சண்டைக்கு வருகிறீர்கள் என அண்டர்டேக்கர் கேட்ட கேள்விக்கு நடிகர் அக்ஷய்குமார் காமெடியான பதில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது