17 வயது சிறுமியை கம்பியால் குத்திவிட்டு கரண்ட் கம்பியில் தொங்கிய வாலிபர்! ஒருதலை காதலால் விபரீதம்

திருவண்ணாமலை அருகே காதலிக்க மறுத்த 17 வயது சிறுமியை கம்பியால் குத்தி விட்டு அருகில் இருந்த கரண்ட் கம்பி மீது கையை வைத்து உயிரை மாய்த்துக் கொண்ட வாலிபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் 17 வயது சிறுமியை கடந்த சில நாட்களாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த வாலிபர், சிறுமியிடம் தன்னுடைய காதலை ஏற்றுக் கொள்ளுமாறு கெஞ்சியுள்ளார். ஆனால் அந்தப் சிறுமி மறுக்கவே ஆத்திரத்தில் அருகிலிருந்த கம்பியை எடுத்து அந்த சிறுமியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் அந்த சிறுமி படுகாயம் அடைந்து கீழே விழுந்தார்.

இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் உடனே அருகில் இருந்த மின்கம்பத்தில் ஏறி மின் கம்பியை இறுக்கமாக பிடித்து கொண்டார். அடுத்த நிமிடமே அந்த வாலிபர் ஷாக் அடித்து உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் விரைந்து அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து உயிருக்கு போராடிய சிறுமியையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒருதலை காதலால் 17 வயது சிறுமியை சரமாரியாக தாக்கி விட்டு கரண்ட் கம்பியில் தொங்கிய வாலிபர் ஒருவரால் திருவண்ணாமலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

More News

இப்படி ஒரு மாஸ்க் அணிவதும், 12345 பாஸ்வேர்டு வைப்பதும் ஒன்றுதான்: ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம் 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக பரவி வருவதை அடுத்து உலக சுகாதார மையம் முதல் உள்ளூர் சுகாதார துறையினர் வரை பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும்

கொரோனாவின் தீவிரத்தன்மைக்கு இதுவும் காரணம்தான்!!! விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!!

கொரோனா நோய்த்தொற்று தீவிரம் அடைந்து வருவதற்கு வயதானவர்களிடம் காணப்படும் அழற்சித் தன்மையும் ஒரு காரணமாக இருக்கலாம் விஞ்ஞானிகள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.

3வது நாளாக 5000ஐ நெருங்கிய கொரோனா: சென்னையில் வழக்கம்போல் 1000 பிளஸ்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களாக 5000ஐ நெருங்கியுள்ள நிலையில் இன்றும் 5000ஐ நெருங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கந்தசஷ்டி விவகாரத்திற்கு ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும்: பிரபல அரசியல் தலைவர்

கந்தசஷ்டி கவசம் விவகாரம் குறித்து ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும் என பிரபல அரசியல் தலைவர் ஒருவர் கூறியுள்ளார் 

தமிழகத்தின் முக்கிய நகரில் 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த மார்ச் மாதம் முதல் இருந்து வருவதால் கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது