தென்னிந்திய நடிகைகளை விபச்சாரத்தில் தள்ளிய தொழிலதிபர் அமெரிக்காவில் கைது
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய தொழிலதிபர் ஒருவர் அமெரிக்காவில் தென்னிந்திய நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபட வைத்த குற்றத்திற்காக அமெரிக்க போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கு திரையுலகில் இணை தயாரிப்பாளராக தன்னை அறிமுகம் செய்து கொண்ட கிஷான் மொடுகுமுடி என்பவர் அமெரிக்காவில் பிரபலம் இல்லாத தெலுங்கு நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணையில் இறங்கிய அமெரிக்க காவல்துறையினர் கிஷான் மற்றும் அவரது மனைவியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் சிலரை வாடிக்கையாளராக கொண்ட கிஷான், அவ்வப்போது நடிகைகளை அவர்களுக்கு சப்ளை செய்து வந்ததாகவும், அவர்களில் ஒரு நடிகை அமெரிக்க போலீசில் அளித்த புகார் காரணமாக கிஷான் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
அமெரிக்காவுக்கு கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரில் கிஷான் நடிகைகளை அழைத்து சென்று அவர்களை அமெரிக்க இந்தியர்களுக்கு $3000 வரை விலை பேசி விபச்சாரம் செய்து வந்ததாகவும், அதேபோல் அமெரிக்காவில் நல்ல வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி பெண்களை அழைத்து சென்று விபச்சாரத்தில் ஈடுபட வைத்ததாகவும் கிஷானிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இன்னும் தீவிர விசாரணை செய்த பின்னர் இவரிடம் சிக்கிய நடிகைகள் யார் என்பது தெரிய வரும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments