மலேசியாவில் தமிழ் நடிகர் திடீர் மரணம்
Send us your feedback to audioarticles@vaarta.com
அறிமுக இயக்குனர் விஜய் இயக்கி வரும் 'க க க போ' என்ற படத்தில் அறிமுகமாகும் புதுமுக நடிகர் கேசவன் மலேசியாவில் நீர்வீழ்ச்சி ஒன்றில் இழுத்து செல்லப்பட்டு பரிதாபமாக பலியானார்.
மலேசியாவில் உள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் நடிகர் கேசவன் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் பெற்றோர் கண்முனே நீர்வீழ்ச்சியில் இழுத்து செல்லப்பட்டார். தகவல் அறிந்து வந்த மலேசிய போலீஸார் அவரது உடலை இரவு முழுவதும் தேடி, இன்று காலை 8 மணியளவில் கண்டுபிடித்தனர்.
'க க க போ' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீடு இவ்வாரம் நடைபெறவிருக்கும் நிலையில் இப்படத்தின் நாயகன் மரணம் அடைந்திருப்பது படக்குழுவினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments