கடைசி நேரத்தில் திடீரென திருமணத்தை நிறுத்திய மணப்பெண்: அதிர்ச்சி காரணம்!

  • IndiaGlitz, [Tuesday,January 07 2020]

அமெரிக்காவில் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வரும் பெண் ஒருவர் பெங்களூரில் உள்ள ஒரு இளைஞருடன் திருமணம் செய்ய நிச்சயம் செய்த நிலையில் கடைசி நேரத்தில் திடீரென தனக்கு திருமணம் வேண்டாம் என்று அமெரிக்கா திரும்பி விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் பணி புரிந்து வரும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவருக்கும் அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருப்பதியில் திருமணம் செய்ய இருவீட்டார் முடிவு செய்தனர்.

இதனையடுத்து திருப்பதியில் ரூம் புக் செய்வது, சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்வது மற்றும் உறவினர்கள் வந்தால் தங்குவதற்கு அறை என இலட்சக்கணக்கில் மணமகன் வீட்டார் செலவு செய்துள்ளனர். கல்யாணத்திற்கு தேவையான உடைகள் மற்றும் பொருட்கள் லட்சக்கணக்கில் வாங்கப்பட்டன. கல்யாண நாளும் நெருங்கியது. இந்த நிலையில் மணப்பெண் திடீரென அமெரிக்காவுக்கு கிளம்பி சென்றுவிட்டார்.

இதுகுறித்து மணமகன் வீட்டில் காரணம் கேட்ட போது ’மணமகனின் மூக்கு பெரிதாகவும் தடிமனாகவும் இருப்பதாகவும் இதை தனது நண்பர்கள் மற்றும் தோழிகள் விரும்பவில்லை என்பதால் இந்த கல்யாணம் தனக்கு வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இதன் பின்னர் மணமகன் ’நான் விரைவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மூக்கை சரி செய்து கொள்கிறேன் என்று சமாதானம் செய்தும் மணப்பெண் சமாதானம் ஆகாமல் பிடிவாதமாக திருமணத்தை நிறுத்தி விடுங்கள் என்று கூறிவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் வீட்டார் தற்போது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். தன்னை திருமணம் செய்வதாக கூறிவிட்டு மோசடி செய்து விட்டார் என்றும் அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு போலிசாருக்கு உத்தரவிட்டுள்ளனர் இதனையடுத்து போலீசார் மணமகள் மற்றும் மணமகள் சகோதரி, மணமகளின் தந்தை ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'தர்பார்' படம் பார்க்க ஜப்பானில் இருந்து சென்னை வந்த ரசிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் ரஜினி ரசிகர்களிடையே பரபரப்பு அதிகமாகிக்கொண்டே வருகிறது.

அமெரிக்கா இராணுவமும் ட்ரம்பும் இனிமேல் தீவிரவாதிகள்.. ஈரான் அறிவிப்பு.

அமெரிக்கா இராணுவமும் ட்ரம்பும் இனிமேல் எங்கள் நாட்டில் தீவிரவாதிகள் என ஈரான் அறிவிப்பு.

JNU மாணவர்கள் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தில், அனுராக் காஷ்யப்..!

கேட்வே ஆஃப் இந்தியாவில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் அனுராக் காஷ்யப் மற்றும் விஷால் தத்லானி ஆகியோர் இணைந்தனர்.

செல்போனால் வரும் பேராபத்து

செல்போன்கள் மன அளவிலும் உடல் அளவிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் செல்போன் வருவதாக நினைப்பது கூட பேராபத்தை விளைக்கும் என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சூரரை போற்று.. யாரோட வாழ்க்கை கதை தெரியுமா..!?

கேப்டன் ஜி.ஆர். கோபிநாத் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவி சூரரை போற்று படம் எடுக்கப்பட்டுள்ளது.