வாயில் பெவிகுவிக்கை ஊற்றி 52 வயது நபரின் கழுத்தை அறுத்த இளம்பெண்: சென்னையில் பரபரப்பு

  • IndiaGlitz, [Tuesday,December 24 2019]

தந்தை வயதில் உள்ள 52 வயது நபர் ஒருவரை வாயில் பெவிகுவிக்கை ஊற்றி சத்தம்போட விடாமல் செய்து கழுத்தை அறுத்து இளம்பெண் ஒருவர் கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 59 வயது சேகர் என்பவரின் மகளும் ஒரு இளம்பெண்ணும் நெருங்கிய தோழிகளாக இருந்தனர். தோழியின் வீட்டிற்கு அந்த இளம்பெண் அடிக்கடி வந்துள்ளார். தோழியின் தந்தை என்பதால் சேகருடன் அந்த இளம்பெண் தந்தை போல் பழகி உள்ளார். இருவரும் அடிக்கடி செல்பியும் எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் சேகர் தன்னுடைய மகளின் தோழியை மகளாக பார்க்காமல் தவறாக பார்த்துள்ளார். இதனை அடுத்து ஒரு சில முறை அவர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது. மகளின் தோழியை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தை காட்டி மிரட்டி பலமுறை அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் அந்த இளம்பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து உள்ளது. இதனால் சேகர் ஆத்திரமாகி நீ திருமணம் செய்தால் உன்னுடைய புகைப்படங்களை எல்லாம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனை அடுத்து அவரை கொலை செய்ய முடிவு செய்த அந்த இளம் பெண், தனக்கு பிறந்தநாள் என்றும், தான் குறிப்பிடும் இடத்திற்கு வந்தால் பிறந்தநாள் பரிசு கொடுக்கப் போவதாக கூறி ஒரு ரகசிய இடத்திற்கு சேகரை வரவழைத்தார் அந்த இளம்பெண்

சேகர் வந்ததும் ‘நீங்க கண்ணை மூடிக் கொள்ளுங்கள், உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது’ என்று கூறியுள்ளார். என்ன சர்ப்ரைசாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே சேகர் கண்களை மூடியபோது திடீரென பெவிகுவிக்கை எடுத்து அவர் வாயில் ஊற்றி வாயை திறக்க முடியாமல் செய்துள்ளார். அதன் பின் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சேகரின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார்

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி வீடியோக்களின் ஆதாரங்களின்படி இளம்பெண்ணை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். தனது தோழியின் தந்தையை தானும் தந்தையாக பார்த்ததாகவும் ஆனால் அவரோ தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததால் அந்த ஆத்திரத்தில் கொலை செய்து விட்டதாகவும் இளம்பெண் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

More News

உப்புநீரில் ஓடும் பைக் எஞ்சின்: 'ஹீரோ' மதி போல் ஒரு நிஜ கேரக்டர்

சிவகார்த்திகேயன் நடித்த 'ஹீரோ' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது என்பது தெரிந்ததே

ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட 'தர்பார்' வீடியோ: குவியும் லைக்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் தர்பார்.

சென்னை திரும்புகிறார் தளபதி விஜய்! 'தளபதி 64' படப்பிடிப்பு என்ன ஆச்சு?

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகா என்ற சிறைச்சாலையில் 'தளபதி 64' படப்பிடிப்பில் கடந்த சில நாட்களாக கலந்து கொண்டிருந்த தளபதி விஜய் இன்று சென்னை திரும்புவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 

நான்வெஜ் சாப்பிட கட்டாயப்படுத்திய கணவரை அடித்தே கொலை செய்த மனைவி!

நான்வெஜ் சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்திய கணவர் ஒருவரை மனைவி கம்பால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

குடியுரிமை சட்ட போராட்டம்: நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சென்னை ஐஐடி மாணவர் 

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் செய்த சென்னை ஐஐடி மாணவர் ஒருவர் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது