மலர்தூவ வேண்டாம், கைதட்ட வேண்டாம்: ஒரு பெண் டாக்டரின் ஆவேச போராட்டம்

கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகம் உள்பட நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் தாக்த்தப்பட்டவர்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதேபோல் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், நர்ஸ்கள் ஆகியோர் தங்கள் உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களுக்கு சரியான பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு ஆங்காங்கே எழுந்து வருகிறது. இதனால் டாக்டர்கள் சிலரும் கொரோனாவால் பாதிக்கப்படுவதால் அவர்களது குடும்பத்தினர்களும் பாதிக்கப்படுகின்றனர். ஒருசில டாக்டர்களின் உயிரையும் கொரோனா பலியாக்கியுள்ளது.

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டர் ஒருவருக்கு கொரோனா தாக்கியுள்ளதை அடுத்து அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் திடீரென போராட்டம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒரு ஜூனியர் டாக்டர் ஒருவர் ஆவேசமாக பேசிய போது ’எங்களுக்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவும் மரியாதை வேண்டாம். எங்களுக்காக பால்கனியில் நின்று யாரும் கைதட்ட வேண்டாம். எங்களுக்கு தேவையான அடிப்படைப் வசதிகளையும் பாதுகாப்புக்கு தேவையான உபகரணங்களையும் வாங்கி கொடுங்கள் என்று அந்த போராட்டத்தில் இளம் பெண் டாக்டர் ஒருவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவுக்கு எதிரான போரில் தங்கள் உயிரையே பணயம் வைத்துப் போராடி வரும் மருத்துவர்களுக்கு தேவையான உபகரணங்களை அரசு ஏற்பாடு செய்து அவர்களின் உயிரை பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

More News

முதலிரவில் மணமகளை கடப்பாறையால் குத்தி கொலை செய்த மணமகன்: அதிர்ச்சி தகவல்

திருவள்ளூர் அருகே முதலிரவில் தனது மனைவியை கடப்பாறையால் குத்திக் கொலை செய்த கணவரால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது 

30 வருட போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த விஜய்சேதுபதி!

30 வருட போராட்டத்திற்கு நடிகர் விஜய்சேதுபதி தனது சமூக வலைத்தளத்தில் ஆதரவு தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பிஸ்கட் என நினைத்து ஜெலட்டின் குச்சியை கடித்த 6 வயது குழந்தை!!! அலட்சியத்தால் நடந்த வீபரீதம்!!!

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே 6 வயது குழந்தை ஒன்று பிஸ்கட் என நினைத்து ஜெலட்டின் குச்சியை வாயில் வைத்து கடித்து இருக்கிறது

சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டமா? சென்னை ஐகோர்ட் கேள்வி

சென்னையில கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதை அடுத்து சென்னையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

இன்று ஒரே நாளில் டாக்டர் உள்பட 10 பேர் பலி: சென்னையில் கொரோனாவின் கோரம்

சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் ஒருவர் டாக்டர் என்றும் வெளி வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது