மலர்தூவ வேண்டாம், கைதட்ட வேண்டாம்: ஒரு பெண் டாக்டரின் ஆவேச போராட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகம் உள்பட நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் தாக்த்தப்பட்டவர்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதேபோல் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், நர்ஸ்கள் ஆகியோர் தங்கள் உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களுக்கு சரியான பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு ஆங்காங்கே எழுந்து வருகிறது. இதனால் டாக்டர்கள் சிலரும் கொரோனாவால் பாதிக்கப்படுவதால் அவர்களது குடும்பத்தினர்களும் பாதிக்கப்படுகின்றனர். ஒருசில டாக்டர்களின் உயிரையும் கொரோனா பலியாக்கியுள்ளது.
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டர் ஒருவருக்கு கொரோனா தாக்கியுள்ளதை அடுத்து அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் திடீரென போராட்டம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒரு ஜூனியர் டாக்டர் ஒருவர் ஆவேசமாக பேசிய போது ’எங்களுக்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவும் மரியாதை வேண்டாம். எங்களுக்காக பால்கனியில் நின்று யாரும் கைதட்ட வேண்டாம். எங்களுக்கு தேவையான அடிப்படைப் வசதிகளையும் பாதுகாப்புக்கு தேவையான உபகரணங்களையும் வாங்கி கொடுங்கள் என்று அந்த போராட்டத்தில் இளம் பெண் டாக்டர் ஒருவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவுக்கு எதிரான போரில் தங்கள் உயிரையே பணயம் வைத்துப் போராடி வரும் மருத்துவர்களுக்கு தேவையான உபகரணங்களை அரசு ஏற்பாடு செய்து அவர்களின் உயிரை பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.
We don’t want flower petals to shower on us, we don’t want you to clap for us but we need protection, we need security - says these Jr Doctors at #GandhiHospital, they were protesting since last night when Covid deceased family members attacked a Jr Doc, demanding CM KCR to come pic.twitter.com/G4Uvfy8wEb
— Nellutla Kavitha (@iamKavithaRao) June 10, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout