3வது படத்திலேயே உச்சத்தை தொடும் இயக்குனர்கள்!
- IndiaGlitz, [Tuesday,May 14 2019]
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒரு இயக்குனர் பத்து அல்லது பதினைந்து படங்கள் இயக்கிய பின்னரே பெரிய நடிகர்கள் பக்கமே அவர்கள் நெருங்க முடியும். ஆனால் இன்றைய இளையதலைமுறை இயக்குனர்கள் ஒன்று அல்லது இரண்டு ஹிட் கொடுத்துவிட்டால் மூன்றாவது படத்திலேயே உச்ச நடிகர்களை தொட்டு விடுகின்றனர்.
'அட்டக்கத்தி', 'மெட்ராஸ்' ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் மூன்றாவது படமாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படத்தையும் 4வது படமாக 'காலா' படத்தையும் இயக்கும் வாய்ப்பை பெற்றார்.
அதேபோல் 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய இரண்டு ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் எச்.வினோத், மூன்றாவது படமாக அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' படத்தை இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது 'மாநகரம்' மற்றும் 'கைதி' படங்களை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் மூன்றாவது படமாக விஜய் நடிக்கவுள்ள 'தளபதி 64' படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இன்றைய இளம் இயக்குனர்கள் தங்கள் திறமையை ஒருமுறை அல்லது இருமுறை நிரூபித்தால் அவர்கள் உச்ச நட்சத்திரங்களை இயக்கும் வாய்ப்பை பெற அதிக வாய்ப்புள்ளது என்பதையே இந்த முன்னுதாரணங்கள் காண்பிக்கின்றன