இரண்டே படங்கள் இயக்கிய இயக்குனருக்கு வாய்ப்பு வழங்கினாரா அஜித்?

  • IndiaGlitz, [Friday,August 12 2022]

ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற மாஸ் நடிகர்கள் தற்போது இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகின்றனர் என்பதும் அந்த படங்கள் ஹிட்டாகி வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் அஜித்தும் இரண்டே இரண்டு படங்கள் இயக்கிய இயக்குனருக்கு வாய்ப்ப் அளிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு தமிழில் வெளியான திரைப்படம் ’8 தோட்டாக்கள்’. சூப்பர் ஹிட் படமான இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீ கணேஷ் என்பவர் இயக்கியிருந்தார். இந்நிலையில் இவரது இயக்கத்தில் உருவான ’குருதி ஆட்டம்’ என்ற படம் சமீபத்தில் வெளியாகி சுமாரான வெற்றியை பெற்றது

இந்த நிலையில் இயக்குனர் ஸ்ரீ கணேஷ்க்கு தனது படத்தை இயக்கும் வாய்ப்பை அஜித்குமார் வழங்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ‘8 தோட்டாக்கள்’ படம் வெளியானபோதே, ஸ்ரீ கணேஷை அழைத்து அஜித் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் விரைவில் அவருடன் அஜித் இணைவார் என்று கூறப்படுகிறது

ஏற்கனவே அஜீத் படத்தை ’விக்ரம் வேதா’ இயக்குனர்கள் புஷ்பா காயத்ரி இயக்க இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது ஸ்ரீகணேஷ் அஜித்தின் அடுத்த பட பட்டியலில் இணைந்துள்ளார்.

More News

கட்டப்பாவாக மாறிய காஜல் அகர்வால், பாகுபலியாக மகன்: வேற லெவல் புகைப்படம்

 பாகுபலி திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி யை போல காஜல் அகர்வாலும் அவரது மகனும் உள்ள புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

இயக்குனர் ஷங்கருடன் 'விருமன்' முதல் காட்சியை பார்த்தாரா தளபதி விஜய்?

கார்த்தி நடித்த 'விருமன்'  திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது என்பதும் முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் இந்த படத்திற்கு

பிரபல நடிகை போல் மாற 15 சர்ஜரி, 48 லட்சம் செலவு செய்த இளம்பெண்!

பிரபல நடிகை போல மாறுவதற்கு இளம்பெண் ஒருவர் 15 அறுவை சிகிச்சைகள் செய்து 48 லட்சம் செலவு செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு இரவுக்கு ஒரு பெண்ணை அனுப்பு: லேடீஸ் ஹாஸ்டல் வார்டன் அளித்த அதிர்ச்சி புகார்!

ஹாஸ்டல் வார்டன் ஒருவர் ஒவ்வொரு இரவுக்கும் ஒரு பெண்ணை அனுப்பு என தன்னை கட்டாயப்படுத்தியதாக அதிகாரி ஒருவர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஜெயம் ரவி மகனின் இன்ப அதிர்ச்சி: வைரல் வீடியோ

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவியின் மகன் தனது பிறந்தநாளின் போது கிடைத்த இன்ப அதிர்ச்சியின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.