'மாஸ்டர்' விஜய் பாணியில் ரசிகர்களுடன் செல்பி எடுத்த இளம் நடிகை.. வைரல் புகைப்படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பின் போது ரசிகர்களுடன் aவர் எடுத்த செல்பி மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் இன்றளவில் அதிகம் நபர்களால் பகிரப்பட்ட புகைப்படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ’மாஸ்டர்’ விஜய் பாணியில் ரசிகர்களுடன் நடிகை மாளவிகா மோகன் எடுத்த செல்பி தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
’மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன் தற்பொழுது ’கிறிஸ்டி’ என்ற மலையாள படத்தில் நடித்து உள்ளார். பள்ளி மாணவியாக அவர் இந்த படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் இந்த படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் மாளவிகா மோகனன் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் நடந்த புரோமோஷன் நிகழ்ச்சியில் அவர் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் விஜய் பாணியில் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் ரசிகர்களிடம் கைகளால் ஹாட் செய்வது உள்பட பல்வேறு போஸ்கள் அளித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
நடிகை மாளவிகா மோகனன் தற்போது விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ’தங்கலான்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் அவருக்கு தமிழ் திரை உலகில் ஒரு திருப்பத்தை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout