பிரபல இளம் நடிகர் விஷம் குடித்து தற்கொலை.. அதிர்ச்சியில் திரையுலகம்!

  • IndiaGlitz, [Tuesday,January 24 2023]

தெலுங்கு திரை உலகின் இளம் நடிகர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கு திரையுலகில் ‘செகண்ட் ஹேண்ட்’, ‘குண்டனபு பொம்மா’, ‘ஷூட்டவுட் அலரு’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சுதிர் வர்மா. இவர் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் விஷம் குடித்ததால் ஆபத்தான நிலையில் இருந்ததாக தெரிகிறது

இதனை அடுத்து அவரை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் மேல் சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனைக்கு மாற்றி உள்ளனர். இந்த நிலையில் அவர் சிகிச்சையின் பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சுதிர் வர்மா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் சுதிர் வர்மாவின் மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.