உங்க வயசுக்கு இதெல்லாம் தேவையா? பீட்டா ராதாராஜனை வெளுத்து வாங்கிய டிடி

  • IndiaGlitz, [Monday,January 23 2017]

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான் ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடையை நீக்க மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என லட்சக்கணக்கானோர் தியாக உள்ளத்துடன் கடந்த ஒரு வாரமாக வெயில், மழை, குளிர் பாராமல் தன்னலம் கருதாமல் போராடினர். ஆனால் இந்த போராட்டத்டை கொச்சைப்படுத்தும் வகையில் பீட்டா நிர்வாகி ராதாராஜன், இலவச செக்ஸ் என்றால் கூட தான் அதிகமாக கூட்டம் கூடுவார்கள் என்று கீழ்த்தரமாக கூறியிருந்தார்.

இவருடைய கருத்துக்கு அனைத்து தரப்பினர்களும் குறிப்பாக பெண்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சி தொகுப்பாளரான டிடி என்ற திவ்யதர்ஷினி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'திருமதி ராதாராஜன் அவர்களே, உங்கள் வயதுக்கு இது போல பேசுவதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும். அறவழியில் போராடும் மாணவர்களை மதிக்க வேண்டும், இது போன்று பேசுவது தவறானது என்று பதிவு செய்துள்ளார்.

டிடியின் இந்த பதிவிற்கு சமூக வலைத்தளத்தில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.

More News

அரசுக்கு நீங்கள் யார் என்பது புரிந்து விட்டது. நடிகர் சிவகுமார்

ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவாக இயற்றப்பட்டுவிட்டதால் மாணவர்களின் இத்தனை நாள் அறவழி போராட்டம் முழுவெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து மெரினாவில் உள்ள மாணவர்கள் போராட்டத்தை முடித்து கொண்டு வீட்டிற்கு செல்லுமாறு ஜல்லிகட்டு ஆர்வலர்கள், திரையுலகினர், வழக்கறிஞர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், சட்ட ī

சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு அவசரச்சட்டம் நிறைவேற்றம்

தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உறுதி செய்யும் அவசரச் சட்ட முன் வடிவு மசோதா சட்டமாக சற்று முன் நிறைவேற்றப்பட்டது. இதனால் இனிமேல் ஜல்லிகட்டு நடத்துவதற்கான தடை முற்றிலும் நீங்கிவிட்டதாகவே கூறப்படுகிறது...

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்

சென்னை மெரீனா, மதுரை அலங்காநல்லூர் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு எழுச்சி போராட்டம் காரணமாக ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது...

பிரதமர், முதல்வரிடம் பேசியுள்ளேன். பொறுமை காக்கவும். கமல்ஹாசன்

ஜல்லிக்கட்டு போராட்டம் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நடந்து வரும் நிலையில் அவ்வப்போது தமது ஆதரவை போராட்டக்காரர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்ததோடு, போராட்டம் அறவழியில் சென்று கொண்டிருந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து வந்தவர் உலக நாயகன் கமல்ஹாசன் என்பது அனைவரும் அறிந்ததே...

போராட்டத்தை கைவிடுவது எப்போது? லாரன்ஸ் முன்னிலையில் மாணவர்கள் தகவல்

சென்னை மெரீனாவில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தாலும், ஒருசில மாணவர்கள் கடல் அருகே சென்று போராட்டம் செய்து வருகின்றனர்