'வேற மாதிரி ஒரு சாண்டியை பார்ப்பீங்க.. 'லியோ' படத்தில் நடித்ததை உறுதி செய்த சாண்டி..!

  • IndiaGlitz, [Saturday,August 19 2023]

நடன இயக்குனர், நடிகர் சாண்டி மாஸ்டர், ‘லியோ’ படத்தில் நடித்திருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது அதை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

‘லியோ’ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குறித்து சாண்டி கூறிய போது ’லோகேஷ் கனகராஜ் நாம் நினைத்ததை விட வேற லெவல் கிரியேட்டர். அவரது ‘லியோ’ படத்தில் நான் ஒரு கேரக்டரில் நடித்துள்ளேன்.

இதுவரை ஒரு ஜாலியான சாண்டியை தான் நீங்கள் படத்தில் பார்த்திருப்பீர்கள். ஆனால் ‘லியோ’ படத்தில் வேற லெவல் சாண்டியை பார்ப்பீர்கள் என்று தெரிவித்தார். இதனை அடுத்து தொகுப்பாளினி, ‘உங்களுக்கு தளபதி விஜய் உடன் காம்பினேஷன் உள்ள காட்சி இருக்கிறதா? என்று கேட்டபோது ’ ஆம் இருக்கிறது’ என்று சாண்டி கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.