என்னிடம் அடி வாங்க தகுதியானவர் நீங்கள்: இயக்குனர் குறித்து ஸ்ரீரெட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு வாய்ப்பு அளிப்பதாக கூறி திரையுலக பிரபலங்கள் பலர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டதாக குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறார். முதலில் இவர் மீது பரிதாபப்பட்ட ஒருசிலர் கூட தற்போது இவர் விளம்பரத்திற்காக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை கூறி வருவதாகவும், அப்படியே அவர் கூறியதில் உண்மை இருந்தாலும் இவருடைய விருப்பத்தின்பேரில்தான் தானே அது நடந்துள்ளது என்றும் கருத்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குனர் வாராகி என்பவர் சமீபத்தில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஸ்ரீரெட்டி மீது விபச்சார வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று புகார் மனு ஒன்றை கொடுத்திருந்தார். இந்த புகார் குறித்து நடிகை ஸ்ரீரெட்டி ஆவேசமாக ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
நான் பாலியல் தொழிலாளி இல்லை. என்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு உண்ணுவதற்கு உணவு கூட கொடுக்காமல் என்னை வெளியே அனுப்பிவிட்டனர். நான். யாரிடம் இருந்தும் ஒரு நயாபைசா கூட வாங்கவில்லை. என்னை அவதூறாக பேசிய வாராகி என்னிடம் அறை வாங்க தயாராக இருக்க வேண்டும். என்னிடம் அடி வாங்க தகுதியானவர் நீங்கள். பாதிக்கப்பட்ட பெண்ணான எனக்கு எனக்கு மரியாதை கொடுப்பதற்கு பதில், என்னை வைத்து மலிவான விளம்பரம் தேடுகிறார் என்று பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com