உங்க இஷ்டத்துக்கெல்லாம் ஆன்லைன் வகுப்புகளை நடத்த முடியாது!!! கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தால் கல்வி துறையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் ஆண்டு இறுதித் தேர்வு நடத்தாமல் தேர்ச்சி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அடுத்த கல்வியாண்டிற்கு பெரும்பாலான தனியார் கல்வி நிறுவனங்கள் தற்போது ஆன்லைன் வகுப்புகளை நடத்த தொடங்கி இருக்கின்றன. இந்நிலையில் குழந்தகைளுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்தக்ககூடாது என சமூக நல ஆர்வர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்துக் குழந்தைகளையும் கட்டாய ஆன்லைன் வகுப்புகளுக்கு வற்புறுத்தும்போது இணைய வசதி இல்லாத குக்கிராமங்களில் இருக்கும் பெற்றோர்களின் நிலைமை கேள்விக்குறியாகும் எனவும் கூறப்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கு நாள் கணக்கில் தொடர்ந்து லேப்டாப், மொபைல் போனைக் கொடுத்தால் அவர்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஆன்லைன் வகுப்புகளுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. மேலும் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப் பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பள்ளிக் கல்வித் நிறுவனங்கள் கொரோனா நேரத்தில் மாணவர்களுக்கு எவ்வளவு நேரம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம், என்னென்ன முறைகளை பின்பறற்ற வேண்டும் போன்ற விதிமுறைகளை வகுத்துக் கொடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
அதைத் தொடர்ந்து தற்போது பள்ளி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில் ஃபீரி கேஜி வகுப்பு குழந்தைகளுக்கு அவர்களது வயது காரணமாக லேப்டாப் மற்றும் மொபைல் போன்களை அனுமதிக்கக் கூடாது எனக் கூறப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு டிவி மற்றும் ரேடியோ மூலம் விளையாட்டான நிகழ்ச்சிகளை நடத்தலாம் எனக் கூறப்பட்டு இருக்கிறது.
எல்கேஜி மற்றும் யூகேஜி மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைன் வகுப்புகளை மட்டுமே நடத்த வேண்டும். அதுவும் விளையாடுடன் இணைந்து வகுப்புகளை அமைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. 1-8 ஆம் வகுப்புள்ள மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 வகுப்புகளை மட்டுமே நடத்த மட்டுமே அனுமதிக்கப் பட்டுள்ளது. அதைத்தவிர 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒருநாளைக்கு 4 வகுப்புகளை நடத்திக் கொள்ளலாம். ஆனால் ஒரு வகுப்புக்கான நேரம் என்பது 30-45 நிமிடங்கள் வரை மட்டுமே இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப் பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout