N95 மாஸ்க்கை மின்சாரக் குக்கரில் வைத்து சுத்தப்படுத்தலாமா??? விஞ்ஞானிகளின் விளக்கம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
Instant Pot, மின்சாரக் குக்கர் அல்லது ரைஸ் குக்கரின் உலர்ந்த வெப்பத்தின் மூலம் N95 முகக்கவசத்தை சுத்தப்படுத்த முடியும் என Science Daily இதழில் கட்டுரை வெளியிடப்பட்டு இருக்கிறது. இல்லனாய்ஸ் அர்பானா சாம்பேன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஒரு ஆய்வில் N95 முகக்கவசத்தை தூய்மைப்படுத்தி மீண்டும் பயன்படுத்துவது எப்படி எனக் கண்டுபிடித்து உள்ளனர். கொரோனா பரவலைத் தடுப்பதற்கு முகக்கவசங்கள் மிகவும் அவசியம் என உலகச் சுகாதார நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் அனைத்து வகையான முகக்கவசங்களும் மிகுந்த பாதுகாப்பை தருவதில்லை என்ற அச்சமும் எழுந்திருக்கிறது.
டியூக் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சியில் N95 மாஸ்க் கொரோனா வைரஸின் நீர்த்துளிகளை முற்றிலும் தடுத்து நிறுத்துகிறது. அதற்கு அடுத்து சர்ஜிக்கல் மாஸ்க் மட்டுமே பாதுகாப்பானவை எனத் தெரிவித்து இருக்கிறது. அதிலும் நெருக்கமான சூழலில் செல்வோர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கட்டாயம் N95 மாஸ்க்குகளை அணியுமாறு வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் N95 விலை மற்றும் தட்டுப்பாடு காரணமாக உலகம் முழுவதும் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இந்தச் சிக்கலை தவிர்க்கும் விதமாக இல்லனாய்ஸ் விஞ்ஞானிகள் தற்போது ஒரு புதிய வழிமுறையைக் கண்டுபிடித்து உள்ளனர்.
அதன்படி Instant Pot, மின்சாரக் குக்கர் அல்லது ரைஸ் குக்கரில் சுமார் 50 நிமிடம் உலர்ந்த வெப்பத்தில் வைக்க வேண்டும். அப்படி வைக்கும்போது முகக்கவசத்தின் உள்ளேயும் வெளியேயும் முழுமையாகத் தூய்மைப்படுத்த முடியும். அதனால் மீண்டும் பயமில்லாமல் தொடர்ந்து N95 மாஸ்க்கை பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். சுகாதாரப் பணியாளர்கள் இந்த முறையைப் பயன்படுத்தும் போது தட்டுப்பாட்டை தவிர்க்க முடியும். மேலும் பாதுகாப்பான வழிமுறைகளில் நீண்ட நாட்கள் N95 உபயோகிக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout