நான் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்ல நீங்கள் யார்? டுவிட்டர் பயனாளியை வறுத்தெடுத்த டாப்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
’ஆடுகளம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை டாப்ஸி அதன் பின்னர் ’வை ராஜா வை’, ஆரம்பம்’ உள்பட சில படங்களில் நடித்தார். தற்போது அவர் பாலிவுட்டில் பிசியான நாயகியாக இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் நேற்று டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனது குடும்பத்தினருடன் வாக்களித்துவிட்டு அதுகுறித்த புகைப்படத்தை தனது சமூக வலைப்பக்கத்தில் பதிவு செய்தார். இந்த புகைப்படத்தை பார்த்த டுவிட்டர் பயனாளி ஒருவர் ’கடந்த பல ஆண்டுகளாக மும்பையில் இருந்து வரும் நடிகை டாப்ஸி வாக்களிக்கும் உரிமையும் மும்பைக்கு மாற்றியிருக்கலாம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த நடிகை டாப்ஸி ‘நான் பல ஆண்டுகளாக மும்பையில் இருந்தாலும் என்னுடைய சொந்த ஊர் டெல்லி தான். என்னுடைய வருமானத்திற்கு வருமான வரி கட்டுவதும் டெல்லியில் தான். நான் ஒரு டெல்லிவாசி என்பதை எந்தக் காரணத்தை முன்னிட்டும் மாற்றிக்கொள்ள முடியாது.
மேலும் ஒரு பெண்ணை நீங்கள் டெல்லியில் இருந்து வேறு ஊருக்கு கொண்டு செல்லலாம். ஆனால் அந்த பெண்ணின் மனதில் இருந்து டெல்லியை ஒருக்காலும் அழிக்க முடியாது. மேலும் நான் என்ன செய்யவேண்டும் எப்படி செய்யவேண்டும் எதை செய்ய வேண்டும் என்பதை எனக்கு யாரும் அறிவுரை கூறத் தேவையில்லை. ஒரு டெல்லிவாசி ஆக என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும்’ என்று பதிலடி கொடுத்துள்ளார். நடிகை டாப்சி இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘Pannu Parivaar’ has voted.
— taapsee pannu (@taapsee) February 8, 2020
Have you ?#VoteDelhi #EveryVoteCounts pic.twitter.com/LdynINfI0P
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout